தலைவர் தந்த வெடிகுண்டு என்னிடம் உள்ளது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலவரத்தை துண்டும் வகையில் பேசிய சீமான் மீது வழக்கு

தலைவர் தந்த வெடிகுண்டு என்னிடம் உள்ளது என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலவரத்தை துண்டும் வகையில் பேசிய சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update: 2025-02-01 00:45 GMT

தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தலைவர் தந்த வெடிகுண்டு என்னிடம் உள்ளது என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலவரத்தை துண்டும் வகையில் பேசிய சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு அசோகபுரம் நெரிக்கல்மேடு பகுதியில் நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வாக்கு கேட்டு கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அப்போது, அவர் பேசும்போது பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய அவதூறு கருத்துகளையும் கூறியதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பெரியாரிடம் உள்ளது வெறும் வெங்காயம் தான். அந்த வெங்காயத்தை என்மீது வீசினால் ஒன்றும் ஆகாது.

ஆனால் என் தலைவன் கொடுத்த வெடிகுண்டு என்னிடம் உள்ளது. அதை நான் உங்கள் மீது வீசினால் உங்களை புதைத்த இடத்தில் ஒரு புல்லு கூட முளைக்காது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் என்று பேசியதாக தெரிகிறது.

இதுதொடர்பாக ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி, திராவிட இயக்க தமிழர் பேரவை மற்றும் பல் வேறு அமைப்புகள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அவர் மீது 4 வழக்குகள் உள்ள நிலையில் நேற்று போடப்பட்ட வழக்கு உடன் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News