7ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை; ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே 7ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.;

Update: 2025-02-01 00:30 GMT

அப்துல் ரகுமான்.

மொடக்குறிச்சி அருகே 7ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி சாவடிபாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர்  கூலித்தொழிலாளி அப்துல் ரகுமான் (வயது 27). இவர் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்ற 7ம் வகுப்பு மாணவியை பாலியல் பாலத்காரம் செய்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அப்துல் ரகுமானை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சி.சொர்ணகுமார் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், 7ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அப்துல் ரகுமானுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

மேலும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி இருந்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜரானார்.

Tags:    

Similar News