ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமை திருவாச்சி ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் தொடங்கியது.;
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் திருவாச்சி ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் தொடங்கியது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் 'என் பாரதத்திற்கான இளைஞர்கள் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவிர்கான இளைஞர்கள்" என்ற கருத்தை மையமாக கொண்டு நேற்று முதல் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் திருவாச்சி ஊராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் நாளான நேற்று காலை இம்முகாமிற்கு வந்த கொங்கு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வ மாணவர்கள் வீடு வீடாகச் சென்று முகாம் பற்றி எடுத்துக்கூறி முகாமிற்கு அழைப்பு விடுத்தனர். பின்னர், மாலையில் நடைபெற்ற முகாம் துவக்க விழாவில் வாவிக்கடை ஊராட்சி முன்னாள் தலைவர் பிரகாஷ் வாழ்த்துரை வழங்க முதல்வர் வாசுதேவன் நன்றி கூறினார்.
இரண்டாம் நாளாள இன்று பணமில்லா பரிவர்த்தனை குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதற்கு மேட்டுக்கடை கரூர் வைசியா வங்கி அலுவலர் மகிலா சிறப்புரை வழங்கினார். இக்கருத்தரங்கில் பணமில்லா பரிவர்த்தனை பாதுகாப்பான முறையில் மேற்கொள்வது எப்படி என்றும் தவறும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இம்முகாமில் சமுதாய கூடத்திற்கு வர்ணம் பூசுதல் மற்றும் தரைத் தளம் சரி செய்தல் கோவில் வளாகம் மற்றும் பள்ளி வளாகம் சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடக்க இருக்கிறது.