பவானி அருகே காடையம்பட்டி ஏரியில் பேரிடா் மீட்பு செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி..!
தேசிய பேரிடா் மீட்புக் குழு மற்றும் பவானி தீயணைப்புப் படையினா் சாா்பில் பேரிடா் மீட்பு செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.;
பவானி அருகே தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் பவானி தீயணைப்புப் படையினர் சார்பில் பேரிடர் மீட்பு செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏரியில் நடைபெற்ற நிகழ்ச்சி
காடையம்பட்டி ஏரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பவானி வட்டாட்சியர் சித்ரா தலைமை வகித்தார். தேசிய பேரிடர் மீட்புக் குழு மேற்பார்வையாளர் வைத்தியலிங்கம், ஈரோடு மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் பெருவெள்ளத்தால் நீர்நிலைகளில் ஏற்படும் பேரிடரை கையாளுதல், நீரில் மூழ்கியவர்களை மீட்பது, முதலுதவி சிகிச்சை அளித்து உயிர் காத்தல் ஆகியவை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
50 வீரர்கள் பங்கேற்பு
இதில், பேரிடர் மீட்புக் குழுவினர் 30 பேர் உள்பட 50 வீரர்கள் பங்கேற்றனர். மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர்கள் கணேசன், கலைச்செல்வன், பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.