கடத்தப்பட்ட பெண் குழந்தையை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த ஊரகப் போலீஸார்..!

பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை போலீசார் 24 மணி நேரத்தில் மீட்டு கடத்திய பெண்ணையும் கைது செய்தனர்.

Update: 2022-07-04 08:00 GMT

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ஷமீனா 

 பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தையை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த ஊரகப் போலீசாரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.  குழந்தையை எடுத்துச் சென்ற கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 34 வயது பெண் மற்றும் அவரது 14 வயது மகளை இன்று  அதிகாலை கைது செய்தனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டது.

வி.பத்ரிநாராயணன், கோயம்புத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், உத்தரவின்பேரில் இந்த வழக்கு தொடர்பாக குழந்தை கடத்தல் கும்பலுக்கு  ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குழந்தையை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட குழு பாலக்காட்டில் கடத்தியவர்களை கைது செய்தது.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன் கூறும்போது, கைது செய்யப்பட்டவர்கள் பாலக்காட்டைச் சேர்ந்த ஹக்கீம் என்பவற்றின்  மனைவி ஷமீனா (34) மற்றும் அவரது 15 வயது மகள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும் தகவலுக்காக தாய் மற்றும் மகளிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்."நாங்கள் அமைத்த 12 சிறப்புக் குழு குழந்தையை கண்டுபிடித்துவிடும் என்று நம்பினோம். 

எங்கள் சிறப்புக் குழுவினர் பல்வேறு இடங்களில் இருந்து சிசிடிவி காட்சிகளை சேகரித்து முழுமையாகச் சோதித்துள்ளனர். இரண்டு பெண்களும் கோயம்புத்தூர் செல்லும் பேருந்தில் ஏறிச் சென்றதை நாங்கள் அறிந்தோம். பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலும்  எங்கள் குழுவினர் 250க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்தனர்.கோவை ரயில் நிலையத்தில் அவரது மகள் பெண் குழந்தையுடன் இருப்பதை கண்டு அவர்கள் கோவையில் இருந்து பாலக்காடுக்கு ரயிலில் பயணம் செய்தது தெரிந்தது.  எங்கள் குழுவினர் பாலக்காடு சென்று பெண் குழந்தையை பத்திரமாக மீட்டனர் என்றார். 

இன்று அதிகாலை 4 மணியளவில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையை அதன் தாய் குணாரன் நகரைச் சேர்ந்த  திவ்யபாரதி (25) இடம் ஒப்படைக்கப்பட்டது.

"சிசிடிவி காட்சிகள் பெண் குழந்தையை கண்டுபிடிக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் முக்கிய பங்கு வகித்தது. பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறு கேட்டுக்கொள்கிறோம், மேலும் இது குற்றங்களைத் தடுக்க அல்லது கண்டறிய உதவும்" என்று  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கூறினார்.

கைது செய்யப்பட்ட ஷமீனாவுக்கு இரண்டு மகள்களும் பத்து வயது மகனும் உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் ஹக்கீமிடம் இருந்து பிரிந்து மணிகண்டன்,  29 என்ற நபருடன் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். ஷமீனா சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக மணிகண்டனுக்குத் தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர். அதனால் மருத்துவமனையில் இருந்த பெண் குழந்தையை திருடி, மணிகண்டனுக்கு பெண் குழந்தை பிறந்ததாக நாடகம் நடத்தினார். ஏற்கனவே ஷமீனாவுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

"அவரது மொபைல் போன் அழைப்பு மற்றும் டவர் விவரங்களை நாங்கள் சரிபார்த்தோம். அவர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கும் சென்றார். அவர் ஏன் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார் என்று அவரிடம் விசாரித்து வருகிறோம். என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்த யூனுஸ் என்பவரது மனைவி திவ்யபாரதி, 25. இவருக்கு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்றாவது நாளான, ஜூன், 29ல், பெண் குழந்தை பிறந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர். பிறந்து ஐந்து நாட்களே ஆன தனது பெண் குழந்தைக்கு நள்ளிரவு 1 மணியளவில் அப்பெண் தாய்ப்பால் கொடுத்துள்ளார், அதிகாலை 5 மணியளவில் கண்விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.

பொள்ளாச்சியில் மகப்பேறு வார்டு அமைந்துள்ள மருத்துவமனையின் புதிய தொகுதி சிசிடிவி கேமரா கண்காணிப்பின் கீழ் இல்லை. கடத்தப்பட்ட பெண் குழந்தையை 24மணி நேரத்தில் மீட்ட போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News