கோவையில், மாணவர் துாக்கிட்டு தற்கொலை

கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் முதலாமாண்டு பயின்ற மாணவர், விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-10 13:43 GMT

கோவையில்,  வேளாண் பல்கலை.,யில்  முதலாமாண்டு பயின்ற மாணவர், விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பஸ் கண்டக்டர் பழனி. இவரது மகன் பிரோதாஸ் குமார் (19) கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்தார். இவர், இளங்கலை வனவியல் (Bsc. Forestry) பட்டப்படிப்பு படிக்க விரும்பிய நிலையில், அது கிடைக்காமல், பயோ டெக் படித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் தங்கியிருந்த விடுதியில் துாக்கு போட்டு உயிரிழந்தார். தகவலறிந்து அங்குவந்த போலீசார், மாணவரின் உடலை  கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், விருப்பப்பட்ட துறை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மாணவர் பிரோதாஸ் குமார் ஏற்கனவே ஒருமுறை வீட்டில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மாணவர் தற்கொலை குறித்து, விடுதியில் தங்கியிருந்த பிற மாணவர்கள், அவரது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News