பொது அமைதிக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை; போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

கோவையில் பொது அமைதிக்கு இடையூறு செய்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

Update: 2022-09-24 08:05 GMT

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை.

கோவையில், தற்போது அசாதாரண சூழல் நிலவிவருவதால், காந்திபுரத்தில் 'ரேபிட் ஆக்சன் போர்ஸ்' பாதுகாப்பு படையினர், கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர், காந்திபுரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த ஊர்வலத்தை நடத்துகின்றனர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர், காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் தொடங்கி, கிராஸ் கட் ரோடு வழியாக, ராம்நகர் சென்று மீண்டும் காந்திபுரம் சென்றடைகின்றனர்.

கொடி அணிவகுப்பு ஊர்வலம் குறித்து,  மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

கூடிய விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். செக்போஸ்ட் இல்லாத இடங்களில் புதிதாக கேமராக்கள் அமைக்க திட்டம் உள்ளது. யாரேனும் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தினால், கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சந்தேகத்துக்குரிய நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், என்றார். 

Similar News