10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

Another opportunity for students to write the exam- அரசு தேர்வு எழுதாத, தேர்வுகளில் தவறி மாணவர்கள் விரைவில் துணைத்தேர்வுகள் எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.;

Update: 2024-05-03 17:51 GMT

Another opportunity for students to write the exam- தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு (கோப்பு படம்)

Another opportunity for students to write the exam- 10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களும், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் வகையில் துணைத்தேர்வுகள் எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான, விடைத்தாள் மதிப்பீடு நடந்து முடிந்துள்ளது. வரும், 6ம் தேதி பிளஸ் 2வுக்கும், 10ம் தேதி - 10ம் வகுப்புக்கும், 14ம் தேதி - பிளஸ் 1க்கும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த தேர்வுகளில், பிளஸ் 2வில், 12,000 பேர், பிளஸ் 1ல், 9,500 பேர், 10ம் வகுப்பில், 17,000 பேர் தேர்வில் பங்கேற்காமல், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். இந்த மாணவர்கள் படிப்பை கைவிட்டு விடாத வகையில், அவர்களை துணை தேர்வில் பங்கேற்க வைக்க வேண்டுமென, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியானதும், துணை தேர்வு தேதி அறிவிக்கப்படும். ஏற்கனவே நடந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும், பங்கேற்காத மாணவர்களும், இந்த துணை தேர்வில் பங்கேற்று, அடுத்து உயர்கல்வியில் சேர வழி வகை செய்ய வேண்டும். இதற்காக, மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் பெற்றோரை சந்தித்து, உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News