ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் பயிலரங்கம்
ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான பயிலரங்கம் நடைபெற்றது.;
ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான பயிலரங்கம் நடைபெற்றது.
ஈரோடு அடுத்த திண்டல் அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பு சார்பில் மூன்று நாட்கள் தொழில் முனைவோருக்கான பயிலரங்கம் நடைபெற்றது.
தொழில் முனைவோரை உருவாக்குதல், புதுமைகளைப் புகுத்துதல் மற்றும் தொழில் முனைவோர் ஆவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளும் வகையில் இப்பயிலரங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், EDII-ன் ஈரோடு பொறுப்பாளர் சசிகுமார், கல்லூரியின் IIC ஒருங்கிணைப்பாளர் தங்கம், Edify Edtech இயக்குநர் பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தொழில் முனைவோர் ஆவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும், இளநிலை வணிக நிர்வாகவியல் கணினி பயன்பாட்டியல் துறை சார்பாக 2025 ஜனவரி 9 மற்றும் 10ம் தேதிகளில் நிதி மற்றும் அதற்கான ஆதாரங்களை பெருக்குதல் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.
இப்பயிலரங்கில் Edify Edtech இயக்குநர் பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்வுகளில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை, தொழில் முனைவோர் அமைப்பும் இளநிலை வணிக நிர்வாகவியல் கணினி பயன்பாட்டியல் துறையும் செய்திருந்தனர்.