குடியரசு தினத்தில் ஏன் குடியரசு தலைவர் கொடியேற்றுகிறார்? தெரிஞ்சுக்கங்க..!

India Republic Day in Tamil-பலருக்கு எந்த விழாவில் யார் கொடியேற்றுவார்கள் என்பது தெரியாது. இப்போ தெரிஞ்சுக்கங்க.

Update: 2023-02-09 08:59 GMT

India Republic Day in Tamil

குடியரசு தினம் என்றால் என்ன ?

India Republic Day in Tamil-விடுதலைக்குப் பின்னர் அரசியலமைப்புச் சட்டம் உருவான பிறகு அது 1950-ம் ஆண்டு ஜன. 26-ம் தேதி முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்த நாளே குடியரசு நாளாகும்.

ஜனவரி 26 ஏன் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது?

இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று.

இந்தியா எந்த வருடம் குடியரசு நாடானது?

ஜனவரி 26, 1950 முதல் இந்தியா ஓர் புதிய அரசியலமைப்புடன் சமயச் சார்பற்ற மக்களாட்சி குடியரசாக மலர்ந்தது.

குடியரசு நாளின் போது டெல்லியில் கொடி ஏற்றுபவர் யார்?

குடியரசு தினத்தில் குடியரசுத்தலைவர் டெல்லியில் ராஜவீதியில் / ராஷ்டிரபதி பவனில் கொடி ஏற்றுவார். மாநிலங்களில் ஆளுநர்கள் கொடி ஏற்றுவர். சுதந்திர தினத்தன்று - பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். குடியரசு தினத்தன்று - குடியரசுத் தலைவர் ராஷ்டிரபதி பவனில் கொடியேற்றுவார்.

குடியரசு தினத்தன்று டெல்லியில் மூவர்ண கொடியை ஏற்றுபவர் யார்?

தலைநகர் டெல்லியில் கடமைப்பாதையில் (முன்னர் ராஜபாதை) நடைபெற்ற 74வது குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு மூவர்ணக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

அதேபோல மாநிலங்களில் ஆளுநர் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்.

குடியரசு தின விழாவில் உலகறிய படைபலம்

டெல்லியில் நடக்கும் குடியரசு விழாவில் நமது இந்திய தேசத்தின் படைபலத்தை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் ராணுவ அணி வகுப்பு டெல்லி கடமைப்பாதையில் (ராஜபாதைஎன்பது பழைய பெயர்) நடைபெறும்.

முன்னதாக குடியரசுத் தலைவர் டெல்லி கடமை பாதையில் கொடியேற்றுவார். இந்த விழாவில் முப்படை அணிவகுப்புடன், இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்களின் அணிவகுப்பும் பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலாசார வாகன ஊர்திகள் இடம்பெறும். சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த அணிவகுப்பு நடக்கும்.

சிறப்பு விருந்தினர் 

மாநிலங்களில் அந்தந்த மாநில கவர்னர்கள் கொடியேற்றுவார்கள். மாநில அரசுகள் சார்பாக பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், சிறந்த முறையில் பணியாற்றிவர்களை கௌரவித்து விருதுகள் வழங்குவதும் இந்த தினத்தில்தான். டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவார்கள். இவர்கள் பெரும்பாலும் பிற நாடுகளில் இருந்து வரவேற்கப்படும் பிரதமர் அல்லது அதிபராக இருப்பார்க்ள. நமது 74வது குடியரசு தினா விழாவுக்கு எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் ஃபட்டாஹ் அல் சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News