குமாரபாளையம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா தொடக்கம்!

குமாரபாளையம்: சௌடேஸ்வரி அம்மன் கோவிலின் திருவிழா சீருடனும் சிறப்புடனும் ஆரம்பம்;

Update: 2025-01-07 09:54 GMT

குமாரபாளையம்: சௌடேஸ்வரி அம்மன் கோவிலின் திருவிழா சீருடனும் சிறப்புடனும் ஆரம்பம்

குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை ராஜா வீதியில் அமைந்துள்ள பழமையான சௌடேஸ்வரி அம்மன் கோயிலின் வருடாந்திர திருவிழா வெகு விமரிசையாக தொடங்க உள்ளது. திருவிழாவின் முதல் நிகழ்வான முகூர்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

வரும் திங்கட்கிழமை, அதாவது போகிப் பண்டிகை அன்று முதல் மூன்று நாட்கள் முக்கிய திருவிழா நிகழ்வுகள் நடைபெற உள்ளன. முதல் நாள் சக்தி அழைத்தல், இரண்டாம் நாள் சாமுண்டி அழைத்தல் , மூன்றாம் நாள் ஜோதி அழைத்தல் ஆகிய முக்கிய நிகழ்வுகளுடன் திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான தங்களது நேர்த்திக்கடனாக கத்திபோடுதல் நிகழ்வு நடைபெறும், ஏராளனமான  பக்தர்கள் வருகை தர உள்ளனர். கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் .

Tags:    

Similar News