தோலில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றுக்கு க்ளோபெட்டா ஜிஎம் கிரீம்..!
Clobetasone Cream Uses in Tamil-தோல் பகுதிகளில் ஏற்பாடும் தொற்றுகளுக்கு குறிப்பாக பூஞ்சைத் தொற்றுகளுக்கு க்ளோபெட்டா ஜிஎம் கிரீம் பயன்படுகிறது.
க்ளோபெட்டா ஜிஎம் கிரீம் பொதுவிளக்கம்
Clobetasone Cream Uses in Tamil-க்ளோபெட்டா ஜிஎம் கிரீம் (Clobeta GM Cream) என்பது பல்வேறு வகையான தோல் நோய்த்தொற்றுகளுக்கு குறிப்பாக பூஞ்சை வகை தோல் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கூட்டு மருந்தாகும். இது சிவத்தல், வீக்கம் மற்றும் அரிப்பு போன்ற அழற்சி போன்றவைகளைக் குறைக்கிறது.
க்ளோபெட்டா ஜிஎம் கிரீம் (Clobeta GM Cream) வெளிப்புற பயன்பாட்டிற்கானது மட்டுமே. மருத்துவரின் அறிவுறுத்தலின்படி பயன்படுத்த வேண்டும். சுத்தமான மற்றும் உலர்ந்த கைகளால் மெல்லிய படலமாக மருந்தினை தோலின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூசவேண்டும். இது உங்கள் கண்கள், மூக்கு, வாய் அல்லது யோனிக்குள் பட்டுவிட்டால் தண்ணீர் கொண்டு கழுவவும். தொற்று குணமடைய பல நாட்கள் முதல் வாரங்கள் வரை கூட ஆகலாம். ஆனால் இந்த மருந்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். மருந்தின் சிறந்த செயல்திறனை உறுதிப்படுத்த சிகிச்சையின் முழு போக்கையும் முடிக்க வேண்டும். ஒருவேளை குணமடையவில்லை என்றாலோ அல்லது மோசமானாலோ உடனே மருத்துவரிடம் பேச வேண்டும்.
இந்த மருந்தின் மிகவும் பொதுவான பக்க விளைவுகளில் அரிப்பு, வறட்சி, சிவத்தல் மற்றும் பயன்படுத்தப்படும் இடத்தில் எரியும் உணர்வு ஏற்படுதல். இவை பொதுவாக தன்னிச்சையானவை. தானே மறைந்துவிடும். கடுமையான பக்க விளைவுகள் அரிதானவை. உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட்டால் (தடிப்புகள், அரிப்பு, வீக்கம், மூச்சுத் திணறல் போன்றவை) மருத்துவரை அணுக வேண்டும்.
வாய் வழியாக அல்லது ஊசி மூலம் எடுத்துக்கொள்ளும் மற்ற மருந்துகளால் இந்த மருந்து அது செயல்படும் விதத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஆனால் நீங்கள் முன்பு இதேபோன்ற மருந்தைப் பயன்படுத்தியிருந்தால், ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட்டிருந்தால் அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். நீங்கள் கர்ப்பமாக இருந்தால், கர்ப்பமடைய தயாராக இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
க்ளோபெட்டா ஜிஎம் கிரீம்-க்கான பயன்கள்
தோல் தொற்றுகள்
க்ளோபெட்டா ஜிஎம் கிரீம்- இன் பக்க விளைவுகள்
பெரும்பாலான பக்க விளைவுகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவையில்லை. உங்கள் உடலுக்கு ஏற்றவாறு மருந்து மறைந்துவிடும்.அவைகள் மருத்துவரை அணுகவும்.
க்ளோபெட்டா ஜிஎம் கிரீம்-ன் பொதுவான பக்க விளைவுகள்
பயன்படுத்தும் இடத்தில் எதிர்வினை
தோல் மெலிதல்
க்ளோபெட்டா ஜிஎம் கிரீம்-ஐ எப்படி உபயோகிப்பது
இது வெளிப்புறப் பயன்பாட்டுக்கு மட்டும். மருத்துவர் அறிவுறுத்திய மருந்தளவு மற்றும் கால இடைவெளியில் பயன்படுத்தவும்.
கர்ப்பம்
கர்ப்பமாக இருக்கும்போது பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் மருத்துவர் பரிந்துரையில் பயன்படுத்தவேண்டும்.
தாய்ப்பால்
தாய்ப்பால் புகட்டுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பரிந்துரை இல்லை. மருத்டுவர் ஆலோசனையுடன் பயன்படுத்திடுவது நல்லது.
மது/சிறுநீரகம்/கல்லீரல்
மது பயன்படுத்துவோருக்கு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களும் பயன்படுத்தக்கூடாது என்பதற்கு பரிந்துரை இல்லை. இருப்பினும் மருத்துவ ஆலோசனை பெற்று பயன்படுத்துவது சிறப்பு.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2