துரு பிடித்த ஆணி குத்தினா தடுப்பூசி போடுங்க..! போடலின்னா..என்னாகும்..? படிங்க..!

'காலில் ஆணி குத்திடிச்சி' என்று சர்வ சாதாரணமாக கூறுவதை நாம் கேட்டிருப்போம். அதற்கு தடுப்பூசி போடலின்னா என்ன ஆகும்? அவசியம் தெரிஞ்சுக்கங்க.;

Update: 2024-11-05 07:29 GMT

துருப்பிடித்த ஆணி குத்தியதால் ஏற்பட்ட காயத்துக்கு கட்டு போடப்படுகிறது-கோப்பு படம்.

ஒருவருக்கு துருப்பிடித்த ஆணி அல்லது உலோகத்துண்டு குத்தி காயப்படுத்திவிட்டதென்று வைத்துக்கொள்வோம். அந்த வெட்டுக்காயத்திற்குப் பின்னர் டெட்டனஸுக்கு எதிராக தடுப்பூசி போடாவிட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்வது மிக மிக அவசியம் ஆகும்.

அப்படி ஒரு துருப்பிடித்த உலோகம் உங்களுக்கு காயம் ஏற்படுத்தினால் ஒருவேளை எதுவும் ஏற்படாமலும் இருக்கலாம். ஆனால், சில நேரங்களில் உங்களுக்கு டெட்டனஸ் நோய் தாக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருத்துவர்கள் ஒருவேளை உங்கள் உயிரைக்காப்பற்றலாம். ஆனாலும் நீங்களே இறப்பதைத்தான் விரும்புவீர்கள். ஏனெனில் டெட்டனசுடன் உயிரோடு இருப்பது அவ்வளவு வேதனையானது.

இந்த செய்தியில் தரப்பட்டுள்ள படம் 1809 ம் ஆண்டு டெட்டனஸ் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் ஓவியம். இந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரால் வரையப்பட்டது. இந்த நிலை opisthotonus என்று அழைக்கப்படுகிறது.

இப்படி ஆவதன் காரணம் என்ன ?

நமது தசைகள் சுருங்கி விரிவடைகின்றன. அப்போது ஒரு ரசாயனம் தசைகளை தளர்த்தும். ஆனால் டெட்டனஸ் அந்த இரசாயனம் வெளியாவதைத் தடுக்கிறது. அதனால் தசைகள் மட்டுமே சுருங்கி விரிவடைந்து விடுகிறது. அது மீண்டும் பழைய நிலைக்கு வராது.

உடலின் பின்புறத் தசைகள் வயிற்றுத் தசைகளை விட வலிமையானவை. எனவே டெட்டனஸ் பாதிக்கப்பட்ட நோயாளியின் வலிமையற்ற வயிற்றுத் தசை விரிவடைவதால் முதுகு வில்போல வளைந்துகொள்கிறது. இறுதியில் அவரது தலையின் பின்பகுதியும் குதிகால்களும் மட்டுமே தரையைத் தொட்டுக்கொண்டு இருக்கும்.

நோயாளிக்கு வலுவான தசைகள் இருந்தால், அவரது நிலை இன்னும் மோசமாக இருக்கும். அவரது கால் தசைகள் மிகவும் வலுவாக சுருங்கும். அவை மனித உடலில் வலிமையான எலும்புகளான தொடை எலும்புகளை உடைக்கும்.

உடலில் உள்ள ஒவ்வொரு தசையும் பல நாட்களுக்கு தன்னிச்சையான பிடிப்புக்கு ஆளாகிறது. இதனால் உயிர்போகும் வலி ஏற்படும். அப்படியான தசைப் பிடிப்புகளை கற்பனை செய்து பாருங்கள். அதைத் தவிர்க்க நாம் எதுவும் செய்ய முடியாது. இறுதியில் உதரவிதானம் சுருங்கிக்கொள்கிறது. மீண்டும் அது விரிவடையாது. எனவே சுவாசிப்பது நின்றுவிடும்.

டெட்டனஸ் பாதிக்கப்பட்ட நோயாளி சுமார் 3 நாட்களில் இந்த நிலையை அடைந்துவிடுவார். ஒரு மனிதன் அனுபவிக்கும் மிகக் கொடூரமான வலியின் அந்த 3 நாட்களை கற்பனை செய்து பாருங்கள்.

இப்படியான துன்பங்களைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி ஒன்றுதான். ஆனால் பலர் தடுப்பூசியை வெறுக்கிறார்கள் அல்லது அலட்சியப்படுத்துகிறார்கள். 2018 ம் ஆண்டில் ஒரு பெண் டெட்டனஸால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு தடுப்பூசி போட மறுத்துவிட்டார்.

கிட்டத்தட்ட 2 மாத மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு குழந்தை உயிர் பிழைத்தது. ஆனால் அந்த பெண் தடுப்பூசி போட மறுத்துவிட்டார். தாயே தனது குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தினார்.

டெட்டனஸ் பாக்டீரியா

டெட்டனஸை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் க்ளோஸ்ட்ரிடியம் டெட்டானி வகையைச் சேர்ந்தவை. இது மண்ணில் காணப்படும் பொதுவான பாக்டீரியா ஆகும். துரு டெட்டனஸை ஏற்படுத்தாது. ஆனால் துருப்பிடித்த ஆணி அல்லது உலோகமானது மண்ணுடன் சிறிது காலம் தொடர்பு கொண்டிருப்பதால் அதில் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த பாக்டீரியா காற்றில்லாமல் உயிர்வாழ்பவை. அதனால் அதன் ஆக்ஸிஜன் நச்சுத்தன்மை வாய்ந்தது. உலோகத்தின் மூலமாக வெட்டுக்காயம் அல்லது கீறல் ஏற்பட்டால், டெட்டனஸ் ஏற்படலாம். ஆனால் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் இருப்பதால் அந்த பாக்டீரியா உயிர்வாழும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

ஆனால் ஒரு ஆணி தோலில் குத்தி காயத்தை ஏற்படுத்தினால், அது பாக்டீரியாவுக்கு ஏற்ற ஆக்சிஜன் இல்லாத சூழலை ஆழமாக உருவாக்குகிறது. அதனால்தான் ஆழமான காயங்களை நாம் அலட்சியப்படுத்தாமல் மிகவும் தீவிரமானதாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

டெட்டனஸுக்கு 'சிகிச்சை அளிக்கலாம்'. ஆனால் சிறந்த சிகிச்சை அளித்தால் கூட மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துவிடுகின்றனர். மேலும் உயிர் பிழைப்பவர்கள் பொதுவாக 8-10 வாரங்கள் மருத்துவமனையில், பெரும்பாலும் வென்டிலேட்டரில் வைக்கப்படுவார்கள். ஆனாலும் கோமா நிலைக்குத் தள்ளப்படலாம். கோமா நிலையில் இருந்து மீண்டுவர 4-6 மாதங்கள் கூட ஆகலாம். இதையெல்லாம் விட காயம் பட்டதும் ஒரே ஒரு தடுப்பூசி போதுமானது.

குழந்தை டெட்டனஸ் என்று இந்த நோயில் ஒரு மாறுபாடு உள்ளது. அதாவது புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குக் கூட டெட்டனஸ் வரலாம். அதாவது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும்போது ஸ்டெரிலைஸ் செய்யப்படாத கத்தரிக்கோலால் வெட்டினால் குழந்தைக்கு டெட்டனஸ் வரலாம். அதனால் தொப்புள்கொடி வெட்டும்போது ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட  கத்திரிக்கோலை பயன்படுத்த வேண்டும்.

Tags:    

Similar News