basil seeds in tamil-கர்ப்பகால மலச் சிக்கலுக்கு சப்ஜா விதை..! மருத்துவ குணம் உள்ளதுங்க..!

basil seeds in tamil-இந்த உலகில் மனித பயன்பாடுகளுக்காக எத்தனையோ மூலிகைகள் உள்ளன. நம் முன்னோர்கள் அதை பயன்படுத்தி பல சிகிச்சைகள் அளித்துள்ளனர்.;

Update: 2022-12-20 05:24 GMT

basil seeds in tamil-சப்ஜா விதை பயன்பாடுகள் (கோப்பு படம்)

basil seeds in tamil-தமிழகத்தில் பாரம்பரியமாகவே வீடுகளில் பல மூலிகைச் செடிகள் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் நமக்குத்தெரியாத மூலிகைகள் களைச் செடிகள் போல நமது வீட்டைச் சுற்றி முளைத்துக்கிடக்கின்றன. இப்படியாக ஆயிரக்கணக்கான விதைகள், செடிகள் என சமையலுக்கும், மருத்துவ பயன்பாட்டிற்கும் உதவுகின்றன.

நம் முன்னோர்கள் பல அரிய விதைகளை நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி உள்ளனர். முன்னோர்கள் வாழ்ந்த ஆண்டுகளில் குறிப்பாக கிராமங்களில் மருத்துவமனை இல்லாத இடங்களில் எல்லாம் மூலிகை செடிகளையும், விதைகளையும் கொண்டே தீராத வியாதியை குணப்படுத்தியுள்ளனர் என்பதை இப்போது நினைத்தால் நம்பமுடிகிறதா..? இன்றும் கிராமப்புற மக்களின் வீடுகளில் நிறைய மூலிகை செடிகள், விதைகளையும் வைத்திருப்பதை நம்மால் பார்க்க முடியும்.


basil seeds in tamil

மருத்துவத்துறை அசுர வளர்ச்சி பெற்றிருந்தாலும் 95 சதவிகித மூலிகை மற்றும் விதைகளைக் கொண்டே மருந்துக்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் சப்ஜா விதைகளும் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. அது எண்ணற்ற பயன்களைக் கொண்டுள்ளது. இந்த சப்ஜா விதைகள் மருத்துவ ரீதியாகவும், சமையல் ரீதியாகவும், அழகுக்கலை ரீதியாகவும் பயன்படுகின்றன. இந்த செய்தியில் நாம் சப்ஜா விதையின் பயன்களைப்பற்றி பார்ப்போம் வாருங்கள்.

1. மலச்சிக்கல் பிரச்சனைக்கு

சப்ஜா விதையை மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் தினசரி இரவு தூங்குவதற்கு முன்பாக ஒரு தேக்கரண்டி அளவு சப்ஜா விதையை நீரில் ஊற வைத்துவிட்டு பிறகு நன்கு ஊறிய சப்ஜா விதையை பாலில் கலந்து பருகினால் மலச்சிக்கல் தீரும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை போக்க சிறந்த மருந்து சப்ஜா விதை.

2. உடல் எடை குறைய

சப்ஜா விதையில் புரதம், அத்தியாவசிய கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, மற்றும் குறைந்த அளவிலான கலோரிகள் உள்ளன. இவை உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


basil seeds in tamil

3. மாதவிடாய் பிரச்னைக்கு

சப்ஜா விதை பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளிலும், வெள்ளைப்படுதல் நோயையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஊற வைத்த சப்ஜா விதையை ஒரு தேக்கரண்டி பாலிலோ அல்லது தேனிலோ கலந்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

4. தலைமுடி வளர்ச்சிக்கு

சப்ஜா விதையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தி முடியின் வேர்களில் இருந்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் பொடுகுத் தொல்லையிருந்தும் விடுதலை அளிக்கிறது சப்ஜா விதைகள்.

5. சீரான ரத்த அழுத்திற்கு

சப்ஜா விதையில் பொட்டாசியம் செறிந்து காணப்படுகிறது. தினசரி ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை தண்ணிரில் ஊற வைத்து, பின்னர் அதை பாலில் கலந்து பருகினால் ரத்த அழுத்தம் சீரான முறையில் இயங்கும்.

basil seeds in tamil

6. சர்க்கரை நோய்க்கு

உலகத்தில் பெரும்பாலான மக்கள் சர்க்கரை நோயினால் அவதிப்படுகின்றனர். முதல் நாள் இரவில் சப்ஜா விதையை நீரில் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் சர்க்கரை நோயாளிகள், ஊறவைத்த சப்ஜா விதையை பாலில் கலந்து பருகினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.


7. உடல் உஷ்ணத்திற்கு

கோடை காலத்தில் மக்கள் உடல் சூடு, அதிக உஷ்ணத்தால் ஏற்படும் கண் எரிச்சல் போன்றவற்றால் அவதிப்படுவார்கள். அதற்கு சப்ஜா விதைகள் பாதுகாப்பு அளிக்கிறது.

8. சளி, இருமல் தடுக்கும்

மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து சப்ஜா விதைகள் பாதுகாக்கிறது. ஒரு தேக்கரண்டி அளவு சப்ஜா விதைகளை ஊற வைத்து அதை சுடுநீரில் கலந்து பருகினால் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து குணம் அடையலாம்.

basil seeds in tamil

9. கண் குறைபாட்டிற்கு

சப்ஜா விதையில் பீட்டா கரோட்டின் அதிகமாக காணப்படுகிறது. சப்ஜா விதையை தினசரி பயன்படுத்தினால் கண் தொடர்பான பிரச்னை நீங்கும்.

10. இதய நோயைக்கு

இதய நோயை சரிசெய்வதில் சப்ஜா விதை பெரும் பங்கு வகிக்கிறது. சப்ஜா விதையில் துத்தநாகம், சல்ஃபர் போன்றவை அதிகளவு இருப்பதால் இதயத் தமனியை காக்க உதவுகிறது.

11. மன அழுத்தம் குறைய

இன்றைய காலத்தில் மக்களை அதிகமாக தாக்குவது மன அழுத்த நோய். இந்த மன அழுத்த நோயை குணப்படுத்தும் ஆற்றல் சப்ஜா விதைக்கு உள்ளது.

basil seeds in tamil

12. எலும்பு வலுப்பட

சப்ஜா விதையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், காப்பர், இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகிறது. சப்ஜா விதையை தினசரி பயன்படுத்தினால் எலும்பு வலிமையாவதற்கு உதவுகிறது.


13. ஆண்மை குறைபாடு நீங்க

ஆண்மை‌க் குறைவுள்ளவர்கள் சப்ஜா விதைகளை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதை தேனில் கலந்து தினசரி‌ பருகினால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

basil seeds in tamil

14. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

சப்ஜா விதையில் வைட்டமின் ஏ, பி, சி, சல்பர், காப்பர் போன்றவை அதிகளவு இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் வலிமைக்கும் சப்ஜா விதைகள் பயன்படுகிறது.

15. இரத்த சோகை பிரச்சனைக்கு

சப்ஜா விதையில் புரதம், நார்ச்சத்து, துத்தநாகம் அதிகம் இருப்பதால் இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் சப்ஜா விதைகளில் காணப்படுகின்றன.

16. சப்ஜா விதையின் அழகுக் குறிப்புகள்

  • பெண்களின் அழகுக்கு சப்ஜா விதை முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை பாலில் கலந்து பெண்கள் பருகினால் ஊளைச்சதை, தேவையற்ற கொழுப்புகள் போன்றவை வெளியேறும்.
  • கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் நீங்க சப்ஜா விதையை மிக்ஸியில் சுத்தமான ரோஸ் வாட்டர் கலந்து அரைத்து அதை பஞ்சில் நனைத்து பூசி வர கருவளையம் மறையத் தொடங்கும்.
  • சப்ஜா விதை தினசரி உட்கொண்டால் முகத்தில் உள்ள வயதான தோற்றம் நீங்கி இளமைப் பொலிவு உண்டாகும்.

basil seeds in tamil

வெயில் காலத்துக்கு சப்ஜா விதை பலூடா :

தேவையான பொருட்கள் :

சப்ஜா விதை – 1 தேக்கரண்டி, பால் – ஒரு டம்ளர், சேமியா – சிறிதளவு, ஐஸ்கிரீம் – 2 க்யூப், பாதாம், வால்நாட், முந்திரி – தேவையான அளவு, சர்க்கரை – தேவையான அளவு, ஸ்ட்ராபெர்ரி, மாதுளை, நாவல் பழம் – சிறிதளவு

செய்முறை

சப்ஜா விதைகளை இரவே ஊற வைத்துக் கொள்ளவும். நன்றாக ஊறியிருப்பதால் அதுவே மறுநாள் காலையில் 3 அல்லது 4 தேக்கரண்டி அளவு ‌வந்துவிடும். மேற்கூறிய பழங்கள் அத்தனையும் தனித்தனியாக தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பின்னர் சேமியாவை வேக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு டம்ளரில் சப்ஜா விதையை ஒரு தேக்கரண்டி போட்டு அதன் மேல் சேமியா சேர்க்கவும். ட்ரை ஃப்ரூட்ஸ் கொஞ்சம் போட்டு, மாதுளம் ஜூஸ் விட்டு அதன் மேல் ஐஸ்கிரீம் போட வேண்டும்.

பின்னர் மறுபடியும் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதைகளை சேர்க்க வேண்டும். பின்பு மீண்டும் சேமியாவை சேர்க்க வேண்டும். பிறகு ட்ரை ஃப்ரூட்ஸ் கொஞ்சம் சேர்த்து நாவல் பழம், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் கலக்கவும். அதன் மேல் ஐஸ்கிரீம் போட வேண்டும். இறுதியில் சர்க்கரை கலந்த பாலை ஊற்றி நன்றாக கலக்கவும். பின்னர் ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு கொஞ்ச நேரம் கழித்து அனைவருக்கும் பரிமாறவும். வெயில் காலத்துக்கு ஏற்ற ஜில் பானம்,இந்த சப்ஜா விதை பலூடா.

Tags:    

Similar News