/* */

அண்ணாமலை மீது ஏற்றப்படும் மஹா தீப கொப்பரை இன்று புறப்பாடு

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலை மீது ஏற்றப்படும மஹா தீப கொப்பரை இன்று புறப்பாடு

HIGHLIGHTS

அண்ணாமலை மீது ஏற்றப்படும் மஹா தீப கொப்பரை இன்று புறப்பாடு
X

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நாளை மலை மீது ஏற்றப்படும் மகா தீப கொப்பரைக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை இன்று காலை நடைபெற்றது. பின்பு 2,688 அடி உள்ள மலை உச்சிக்கு கொட்டும் மழையில் மகா தீப கொப்பரை அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் எடுத்துச் செல்லப்பட்டது .

தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை, திரியாக பயன்படுத்தப்படும் 11 ஆயிரம் மீட்டர் காடா துணி, 3500 லிட்டர் முதல் தர நெய் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் மலை மீது அவை கொண்டு செல்லப்படுவிடும்.

மகாதீபம் ஏற்றும் மலை உச்சியில் கமாண்டோ படைவீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார்கள். தீபத்திருவிழாவின் போது பருவத ராஜகுலத்தினர் மட்டுமே மகாதீபம் ஏற்றும் உரிமையை பெற்றவர்கள் என்பதால் அப்பணியை அவர்கள் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள்.

திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருவதால், தீபத்திற்கு ஏற்றப்படும் நெய் மற்றும் திரி ஆகியவற்றினை பாதுகாப்பாக வைக்க தார்ப்பாய்களும் எடுத்து செல்லப்படுகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது .

Updated On: 18 Nov 2021 5:39 AM GMT

Related News