/* */

10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து 30 பயணிகள் படுகாயம்

திருவண்ணாமலை அருகே பத்தடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்து 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து  30 பயணிகள் படுகாயம்
X

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.

சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி 50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று இன்று மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் எதிரே மலப்பாம்பாடி கிராமத்தில் வசித்து வரும் வேலாயுதம் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

திருவண்ணாமலை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை அரசு பேருந்து கடக்க முயன்றபோது, திடீரென குறுக்கே வந்த வேலாயுதம் வாகனத்தின் மீது மோதிவிடக்கூடாது என பேருந்தை வலதுபக்கம் திருப்பிய பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்தது

அப்போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து 10 அடி பள்ளத்தில் இறங்கியது. இதனால் பேருந்திற்குள் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். . இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லாரி மோதியதில் தந்தை-மகள்கள் படுகாயம்:

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அழகுசேனை சூளைமேட்டில் வசிப்பவர் அண்ணாமலை (வயது 42). இவர், தனது மகள்கள் ஜெயஸ்ரீ (16) பவித்ரா, (14) ஆகியோரை இன்று காலை பள்ளிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.

அப்போது பின்னால் வந்த மினி லாரி திடீரென பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 9 March 2023 1:45 PM GMT

Related News