போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ரகளையில் ஈடுபட்டால் வழக்கு பதிவு

போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ரகளையில் ஈடுபட்டால் வழக்கு பதிவு
X

செய்யாறு அரசு கலைக் கல்லூரி

போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக ரகளை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ரகளையில் ஈடுபட்டால் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்யாறு அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இடையே பஸ்சில் இடம் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் நேற்று முன்தினம் ஒருவரை ஒருவர் தாக்கிக் ரகளையில் ஈடுபட்டனர்

நேற்று முன்தினம் கல்லூரிக்கு காலை சுழற்சியில் வகுப்பு முடித்து மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியில் வந்தனர். மதியம் 1.30 மணி அளவில் புறவழிச் சாலை பேருந்து நிறுத்தத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஆரணி பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே பேருந்தில் இடம் பிடிப்பத்தில் போட்டி ஏற்பட்டு மோதலாக உருவானது.

இதுதொடர்பாக, மாணவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடந்து பின்னர் கைகலப்பாக மாறியது. தொடர்ந்து, மாணவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் அங்கு போர்க்களம் போல் மாறி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு போலீசார் விரைந்து வந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட மாணவர்களை கலைத்தனர்.

அதனைத்தொடர்ந்து நேற்று செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமை தாங்கினார். துணை முதல்வர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், அமுல்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் செய்யாறு துணை துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் கலந்துகொண்டு பேசியதாவது:-

பெருமைமிக்க இக்கல்லூரியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறீர்கள். உங்களின் பெற்றோர்கள் பெரிய கனவுகளுடன் கல்லூரிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

குடும்ப சூழ்நிலை, உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். எவ்வித புகாருக்கும் இடமின்றி, கல்லூரி பருவத்தில் கல்வி கற்க வேண்டும்.

செய்யாற்றில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் புகார் அளித்தால் ரகலையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

மேலும் கல்லூரி நிர்வாகமே புகார் அளிக்காமல் விட்டு விட்டாலும் பொதுமக்கள் புகார் அளித்தாலோ ஏன் காவல்துறையே பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்ததாக ரகலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறை தண்டனை என்ற நிலைக்கு செல்லக்கூடும். இதனால் கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும்.

இதனை கருத்தில் கொண்டு கல்லூரி பருவத்தில் இது போன்ற ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் இனிமேல் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக ரகளையில் ஈடுபட்டால் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

மேலும் ரகளை ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெற்றோர்களை அழைத்து விசாரிக்க உள்ளோம் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் மேலும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி பெற்றோர்களுக்கும் தங்களது கல்லூரிக்கும் சிறந்த பேரை வாங்கித் தர வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story