/* */

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஞானதிரவியம் எம்பி தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்
X

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், (DISHA COMMITTEE) திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், (DISHA COMMITTEE) திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜீ, மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலையில் இன்று (11-05-2021) நடைபெற்றது.

இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார திட்டம், தீன தயாள் உபாத்தியாய கிராம மின்வசதி திட்டம், பிரதமமந்திரி வீட்டு வசதி திட்டம், துாய்மைபாரத இயக்கம், தேசிய ஊரக குடிநீர் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை திட்டம், தேசிய சமூக உதவித்திட்டங்கள், அந்தியோதயா அன்னயோஜனா திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள், தேசிய நில ஆவணங்கள் கணினி மயமாக்கல் திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், தேசிய நெடுஞ்சாலை திட்டம், தேசிய மின் ஆளுமைத் திட்டம், மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சித் திட்டம், ஷியாமபிரசாத் முகர்ஜி ரூர்பன் இயக்கம், ஜல் ஜீவன் மிஷன், வேளாண்மைத்துறை, வனத்துறை, மருத்துவத்துறை, பிரதம மந்திரி கிராமச் முன்னேற்ற திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் செயல்படுத்திவரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலன் கருதி விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் மேலும், மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். இத்திட்டங்கள் அனைத்தும் சிறந்த முறையில் செயல்படுத்தி பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் விதத்தில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என குழுவின் தலைவர் மற்றும் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் தெரிவித்தார். இக்கூட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவிச்சந்திரன், இணை இயக்குநர் வோளண்மை கஜேந்திரபாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்.

Updated On: 11 May 2022 1:43 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  2. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  4. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  5. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  6. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  9. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’