/* */

தெலுங்கு வருட பிறப்பையொட்டி நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு

தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு தெலுங்கு பேசும் மக்கள் நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.

HIGHLIGHTS

தெலுங்கு வருட பிறப்பையொட்டி நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு
X

நெல்லையப்பர் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு நாயக்கர் மன்னர்கள் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 

நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு நாயக்கர் மன்னர்கள் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் திருகோவிலை புனரமைப்பு செய்த மன்னர்களான நாகம நாயக்கர், விஸ்வநாத நாயக்கர், கிருஷ்ணப்ப நாயக்கர், திருமலைநாயக்கர் உள்ளிட்ட 7 தெலுங்கு மன்னர்களில் சிலைகள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ளது. தெலுங்கு வருட பிறப்பினை முன்னிட்டு தெலுங்கு பேசும் மக்கள் நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக தெலுங்கு மன்னர்களின் சிலைக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து நாயக்க மன்னர்களின் சிலைக்கு புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு பூ, தேங்காய், பழங்கள் படைக்கப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான தெலுங்கு மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Updated On: 2 April 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  8. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  9. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  10. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி