/* */

நெல்லையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: சிறப்பு கண்காணிப்பு குழு ஆலோசனை

வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் சிறப்பு கண்காணிப்பு குழு ஆலோசனை.

HIGHLIGHTS

நெல்லையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: சிறப்பு கண்காணிப்பு குழு ஆலோசனை
X

திருநெல்வேலி மாவட்டம் வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா, காவல்துறை சிறப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபின் தினேஷ் மொடக் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு முன்னிலையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அபூர்வா, காவல்துறை சிறப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபின் தினேஷ் மொடக் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவின்குமார் அபினபு, மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அபூர்வா, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தயார் நிலையில் உள்ளனர். நீர் நிலைகளை 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் மூலம் அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்கள் மழையினால் எற்படும் பாதிப்புகளை உடனடியாக சரி செய்வதற்கும் தேவையான வசதிகளுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் ஏற்படும் பழுதுகளை அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து உடனடியாக சரி செய்து போக்குவரத்து இடையூறு ஏற்படாத வண்ணம் சாலைகளை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க ஏதுவாக 128 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து விதமான உபகரணங்கள் (ஜெ.சி.பி, கிட்டாட்சி, நீர் உறிஞ்சும் மோட்டார், மரம் அறுக்கும் இயந்திரங்கள்) போன்ற பல்வேறு விதமாக இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.

மழை காலம் முடிந்தவுடன் பழுதான சாலைகளில் உடனடியாக சரி செய்ய மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மேலும் பிரதான சாலைகளில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை உடனடியாக தற்காலிகமாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தடையின்றி விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க அனைத்து துறை அலுவலர்கள் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட மழைகால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளிலும் தேவையான கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க சுகாதாரதுறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், கோட்டாட்சியர்கள் சந்திரசேகர் (திருநெல்வேலி), சுமதி (சேரன்மகதேவி), தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் அண்ணாத்துரை, சிற்றாறு வடிநிலகோட்ட செயற்பொறியாளர் சிவக்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவிசந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திர பாண்டியன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் அபிபுர்ரகுமான், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 10 Nov 2021 5:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு