/* */

27வது வார்டில் பாஜக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்

27வது வார்டில் பாஜக வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி தேர்தல் அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் திறந்து வைத்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

HIGHLIGHTS

27வது வார்டில் பாஜக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்
X

27வது வார்டில் பாஜக வேட்பாளர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்கும் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி மாநகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 27வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசுவாமியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

தேர்தல் அலுவலக திறப்பு விழாவிற்கு வந்த எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து வேட்பாளர்கள் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன், பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி மாநில துணைத் தலைவர் வேல்.ஆறுமுகம், பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் முத்து பலவேசம், மண்டலத் தலைவர்கள் ஆனந்தராஜ், மாரியப்பன், அங்குராஜ்,.பிரேம்குமார், முன்னாள் பாஜக மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் கோமதி சங்கர், மண்டல் பொதுச் செயலாளர் எஸ்.எம்.சங்கர், குன்னத்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் முத்துப்பாண்டி, பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் முருகானந்தம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் ராஜசெல்வம், சுடலை, பாரதிய ஜனதா கட்சியின் பிற வார்டுகளின் வேட்பாளர்கள் மாரியம்மாள், இசக்கி ஐயப்பன், குருசாமி, அமிர்தம் வெங்கடேஷ், பால விக்னேஷ், எஸ்.எம்.காந்தி ஆகியோர் மற்றும் பிரச்சாரம் மற்றும் வெளியீட்டு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் முருக இளங்கோ, நெசவாளர் பிரிவு மூர்த்தி மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுப்புலட்சுமி, பிரச்சாரம் மற்றும் வெளியீட்டு பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்ட மகாதேவன், இளைஞரணி மண்டல தலைவர் வேணுகோபால், தொழில் பிரிவு மாவட்ட செயலாளர்கள் சபரிமலைவாசன், மாரியப்பன், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், முருகன், கரிசல் மாரியப்பன், நாதன் பாபு, தங்கராஜ், காளிராஜ், சதீஷ் மகாதேவன், மற்றும் கோபிநாத் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Feb 2022 10:42 AM GMT

Related News