/* */

தென்மாவட்டங்களில், கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும் - தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உறுதி

தென்மாவட்டங்களில், கஞ்சா விற்பனை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என, தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறினார்.

HIGHLIGHTS

தென்மாவட்டங்களில், கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும் - தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உறுதி
X

தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்தார்.

தென் மாவட்டங்களில் கஞ்சா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என, தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்தார்.

நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், நெல்லை மாவட்ட எஸ்.பி சரவணன், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

நெல்லை மாவட்டம், சீவலப்பேரியில் மாயாண்டி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அதேபோன்று பேட்டை பகுதியிலும் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை, தென் மாவட்டத்தில் ஏற்பட்டது. தொடர்ந்து வேறு ஏதும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கொலை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமிபத்தில் நடந்த கொலை சம்பந்தமாகவும், தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வருகை தருவதை ஒட்டியும் பாதுகாப்பு பணிகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;

நெல்லை மாவட்டத்தில், கடந்த 2021 ம்ஆண்டு 188 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த 2022 ம் ஆண்டு, இதுவரை 204 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 958 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நன்னடத்தைக்கான பிணை பத்திரம் பெறப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன், சீவலப்பேரில் நடந்த கொலையில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

தென் மாவட்டங்களில் குற்ற செயலில் ஈடுபடுபவர்கள், கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தென் மாவட்டங்களில் கஞ்சா விற்பனையை முழுவதுமாக ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கஞ்சா ஏற்றுமதியாகும் ஆந்திரா வரை சென்று குற்றவாளிகள் கைது செய்து நடவடிக்கை எடுத்ததுடன், குற்றவாளிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ரூ. 15 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Updated On: 23 Nov 2022 3:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...