/* */

அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ளவர்களை 2ம் நாள் மீட்கும் பணியை தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடங்கியுள்ளனர்.

HIGHLIGHTS

அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
X

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் இரண்டாம் நாள் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து பணிகளை தொடங்கியுள்ளனர்.

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் இரண்டாம் நாள் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து பணிகளை தொடங்கியுள்ளனர். விபத்து தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் 4 பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த பாறை சரிவு விபத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். நேற்று காலை தீயணைப்பு துறை, மீட்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியை தொடங்கிய போது முதற்கட்டமாக ஆறு பேரில் கிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன், விஜய் இருவரை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவதாக கிட்டாச்சி ஆப்பரேட்டர் செல்வத்தை மாலையில் மீட்டனர். ஆனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே செல்வம் உயிரிழந்தார்.

இந்த நிலையில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குவாரியில் சிக்கியிருக்கும் மேலும் மூன்றுபேரை மீட்பதற்காக, நேற்று இரவு 12 மணிக்கு விபத்து நடந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். இரவில் முதற் கட்ட ஆய்வை முடித்து இன்று காலை 7 மணி அளவில் குவாரியில் சிக்கி இருக்கும் தேசிய பேரிடர் மீட்புக் குழு இன்ஸ்பெக்டர் விவேக் ஸ்ரீவத்சவ் தலைமையில் மீட்பு பணியை தொடங்கியுள்ளனர். குவாரியில் தற்போது பாறைகளுக்கு இடையே சிக்கி இருக்கும் லாரி ஓட்டுனர்கள் செல்வகுமார், ராஜேந்திரன் மற்றும் லாரி கிளீனர் முருகன் 3 பேரையும் மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரண்டு குழுக்களாக பிரிந்து மீட்பு பணிகளை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கல்குவாரியில் நடந்த விபத்து தொடர்பாக, முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் 304, 304 A, 336 மூன்று பிரிவுகளின் கீழ் குவாரி உரிமையாளர் சங்கரநாராயணன், குவாரி ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் மற்றும் மேலாளர் செபஸ்டின் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உரிமையாளர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On: 16 May 2022 4:58 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  2. திருவண்ணாமலை
    இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  5. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  7. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  8. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  9. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  10. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...