/* */

ஸ்ரீரங்கம் இராசவேலர் செண்பக தமிழ் அரங்கிற்கு திருச்சியின் ஆளுமை விருது

ஸ்ரீரங்கம் இராசவேலர் செண்பக தமிழ் அரங்கிற்கு திருச்சியின் ஆளுமை விருது புத்தக திருவிழாவில் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் இராசவேலர் செண்பக தமிழ் அரங்கிற்கு திருச்சியின் ஆளுமை விருது
X
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முன்னிலையில் எழுத்தாளர்  ராமகிருஷ்ணன் இராச.  இளங்கோவனுக்கு விருது வழங்கினார்.

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் கடந்த 16ம் தேதியில் இருந்து புத்தக திருவிழா நடந்து வருகிறது. இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி வருகிறார்கள்.

புத்தக திருவிழா பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக மாவட்ட நூலகம் சார்பில் தினமும் மாலை நேரத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு சொற்பொழிவுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பல ஆண்டுகளாக சனிக்கிழமை தோறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இராசவேலர் செண்பக தமிழ் அரங்கிற்கு திருச்சியின் ஆளுமை விருதினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முன்னிலையில் எழுத்தாளர் ராமகிருஷ்ணன் வழங்கி கவுரவித்தார்.

இந்த விருதினை இராசவேலர் செண்பக தமிழ் அரங்கின் பொறுப்பாளர் இராச. இளங்கோவன் பெற்றுக்கொண்டார்.

Updated On: 25 Sep 2022 8:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு