/* */

திருச்சியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

திருச்சியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
X

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்.

திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மனித உடலுக்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும் சமூகத்தில் இளைஞர்களின் வாழ்வை சீரழிக்க கூடிய போதைப் பொருட்களை இளைஞர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் திருச்சி மாநகர போதையில்லா நகரமாக உருவாக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் செயல்பட்டு வருகிறார்.

இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று திருச்சி மாநகர காவல் துறை மற்றும் ஏர்போர்ட் முறை சிட்டி நிறுவனத்துடன் இணைந்து 10 கிலோமீட்டர் தூர மாரத்தான் ஓட்ட போட்டி நடைபெற்றது. போட்டியானது கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோசப் கல்லூரியில் இருந்து தொடங்கி சிங்காரத்தோப்பு மேல புலிவார்டு ரோடு, மரக்கடை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, மேலப்புதூர் தலைமை தபால் நிலையம் சந்திப்பு, டி.வி.எஸ். டோல்கேட், சுப்பிரமணியபுரம், கொட்டப்பட்டு, ஏர்போர்ட் வழியாக மொராய்ஸ் சிட்டியில் நிறைவு பெற்றது. இதில் சுமார் 1200 மாணவ மாணவியர் மற்றும் 600 பொதுமக்கள் காவலர்கள் உட்பட மொத்தம் 1800 பேர் கலந்து கொண்டனர்.

இப்போட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் மாரத்தானில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மூத்த குடிமக்கள் என தனித்தனியாக நடைபெற்றது‌.

இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தின் இறுதியில் வெற்றி பெறுவோருக்கு ரூ. மூன்று லட்சம் பரிசு தொகையை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் மொராய்ஸ் சிட்டியின் நிறுவனர் லெப்ரணி மொராய்ஸ் ஆகியோர் வழங்கினார்கள். மேலும் மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி தனது பாராட்டுகளை மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

Updated On: 5 Dec 2022 7:48 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!