தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கோவில் திருவிழா இன்று இரவுடன் நிறைவு

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கோவில் திருவிழா இன்று இரவுடன் நிறைவு
X

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில்  திருவிழா தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள். (பைல் படம்)

Veerapandi Kovil Theni-தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழா இன்று இரவு 12 மணியுடன் நிறைவுக்கு வருகிறது.

Veerapandi Kovil Theni-தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழாவில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, நெல்லை. கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பங்கு பெருகின்றனர்.

கடந்த 29 நாட்களுக்கு முன்னர் கொடிமரம் நடுதலுடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் மே 10ம் தேதி தொடங்கியது. இன்று மே 17ம் தேதி இரவுடன் இந்த ஆண்டு விழா நிறைவுக்கு வருகிறது. நாளை காலை கிராம பொங்கல் விழா நடைபெறும். இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு பக்தர்கள் கூட்டம் இருந்தது. நாளை காலை 6 மணி முதல் தேனியில் இருந்து சி்ன்னமனுார், உத்தமபாளையம், கம்பம், குமுளி செல்லும் பஸ்கள் வழக்கமான பாதையில் செல்லும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story