ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது!

ஈரோடு : ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு வீரப்பன்சத்திரம், பெரியவலசு, இரட்டைப்பாளி கோயில் வீதி பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக ஈரோடு வடக்கு போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள், அதேபகுதியில் உள்ள கொத்துக்காரா் வீதியைச் சோ்ந்த கதிரவன் (27), வீரப்பன்சத்திரம், மாரப்பன் வீதியைச் சோ்ந்த நவீன்குமாா்(23) என்பது தெரியவந்தது.
போதை மாத்திரைகள் பறிமுதல்
மேலும் அவா்கள் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தும் வகையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்த 90 மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா்.
கதிரவன் மீது ஏற்கெனவே போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கும், நவீன்குமாா் மீது அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன என போலீஸாா் தெரிவித்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu