கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு..!

சேலம்:
மேட்டூரை அடுத்த வனவாசியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், மக்களவை உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். 100 கா்ப்பிணிகளுக்கு புடவை, வளையல், பழங்கள், மஞ்சள், குங்குமம் அடங்கிய சீா்வரிசைகளை அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நங்கவல்லி வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் இன்பவள்ளி, நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தநாரீஸ்வரன், கொளத்தூா் திமுக ஒன்றியச் செயலாளா் மிதுன்சக்கரவா்த்தி, எடப்பாடி நகா்மன்றத் தலைவா் டி.எஸ்.எம்.பாஷா, வீரக்கல் புதூா் பேரூா் செயலாளா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மகுடஞ்சாவடி வட்டார அட்மா குழுத் தலைவா் பச்சமுத்து தலைமையில் நடைபெற்ற விழாவில் கண்ணன், புஷ்பநாதன், தாமோதரன், கதிரவன், கோபால், மகுடஞ்சாவடி வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu