தமிழகத்தை குறி வைக்கிறது பா.ஜ.க., பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்!
அரசியல் கணிப்பில் வல்லவர் என அறியப்படும் பீகாரின் பிரசாந்த் கிஷோர் 2024 தேர்தல் கணிப்புகளை சொல்லியுள்ளார். இன்னும் ஓட்டுப்பதிவிற்கு 10 நாட்களே உள்ள நிலையில் அவரின் கடைசி கட்ட கணிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.
அவர் உள்ளதை உள்ளபடி சொல்லியுள்ளார். மோடி தான் அடுத்த பிரதமர் என்பதை உறுதியாக சொல்லும், அவர் நாடு முழுவதும் பா.ஜ.க., 350 தொகுதி வரை வெல்லலாம் என்கின்றார். இது மிக சரியான கணிப்பாக இருக்கலாம். அப்படியே இந்தியாவில் இனி பாஜகவினை அசைக்க வெகுகாலம் ஆகும் என்கின்றார். அது பல தசாப்தங்களுக்கு பின் அன்று வரும் சூழலை பொறுத்து தான் அமையும் எனவும் ஆருடமும் சொல்கின்றார்.
காங்கிரசின் செயல்பாடுகளை மிக மோசமாக விமர்சிக்கும் அவர் ராகுல்காந்தியின் பொறுப்பில்லா தொலைநோக்கில்லா பக்குவமில்லா செயல்பாட்டால் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து விட்டதையும் இனி அது மீண்டு எழவே முடியாது என்பதையும் சுட்டிகாட்டுகின்றார்.
பாஜக ஏற்கனவே அசுரபலத்துடன் இருக்கும் நிலையில் இம்முறை மேற்குவங்கம், தமிழகம், தெலுங்கானா என எல்லா இடங்களிலும் வளர்ச்சி காட்டிபலம் பெறும், வடகிழக்கிலும் பலம் பெறும் எனவும் கணித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் அது மம்தாவினை வீழ்த்தி எழும் என சொல்லும் அவர் தெலுங்கானாவில் அக்கட்சி இரண்டாம் இடம் ஏன் முதலிடமே பிடிக்கும் வாய்ப்பு உண்டு என்கின்றார். தமிழகத்தையும் பாஜக குறி வைத்து விட்டது. அதனால் முழு சக்தியும் காட்ட தயாராகின்றார்கள். இனி அங்கும் அக்கட்சியின் வாக்குவங்கி அதிகரிக்கும் என்கின்றார்.
நியூசிலாந்து விசா கடும் கட்டுப்பாடுகள்! வெளிநாட்டு வேலைகளுக்கு தடைக்கல்!
பாஜக வளர்ச்சி்க்கு முக்கிய காரணம் எதிர்கட்சிகளின் சரிவு தான் என்கிறார். எதிர்க்கட்சிகளிடம் ஒருங்கிணைந்த திட்டமோ சரியான தலைமையோ இல்லாததால், அவர்களே சறுக்கி கொண்டனர் என்கிறார். அந்த வாய்ப்பினை பாஜக பயன்படுத்திக் கொண்டது என்பது போல் நகர்கின்றது.
அவர் எந்த ஒரு இடத்திலும் எதிர்க்கட்சிகள் பலம் பெறும் என்று சொல்லவில்லை. எந்த கட்சி பாஜகவுக்கு சவால் விடும் என்பதையும் சொல்லவில்லை. அவரின் முழு பேட்டியும் பார்த்தால் இனி பாஜகவுக்கு சவாலாக எந்த கட்சியும் வர முடியாது என்கிறார். இது நாட்டுக்கு மிகவும் நல்லது.
இனி மாகாண கட்சிகளின் அட்டகாசம், கூட்டணி ஆட்சி குழப்பம், தேவையற்ற சர்ச்சைகள் வராது என அவர் சொல்ல வருவது தெளிவாக புரிகின்றது.
ரஷ்ய புரட்சி, சீன புரட்சி, கமால் பாஷா கால துருக்கி, இன்னும் பல பெரும் புரட்சிகளை போல பாரத புரட்சி ஒன்றை பாஜக செய்து விட்டதை பிரசாந்த் கிஷோர் தெளிவாக சொல்கிறார். தமிழகத்தில் பாஜக இரு இலக்க இடங்களை பெறும் வாக்குவங்கி அதிகரிக்கும் என்றவர், திமுகவின் எதிர்காலம் பற்றி அதன் சறுக்கல் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. நல்லவிதமாகவும் சொல்லவில்லை.
சரி, எப்படி தமிழகத்தை அவரால் கணிக்க முடிகின்றது?
தமிழக சட்டமன்ற தேர்தலில் மாநிலம் முழுக்க கிளை பரப்பியவர் பிரசாந்த் கிஷோர். எந்த வியாபாரியும் தான் பரப்பிய கிளையினை முழுமையாக மூடுவதில்லை. அப்படி அவர் தமிழகத்தில் வைத்துள்ள கிளைகள் மூலம் பல நுணுக்கமான தகவல்கள் அவருக்கு கிடைத்திருக்கலாம். அதில் திமுக பற்றி நல்லவிதமாக எதுவும் சொல்லாமல் அவர் தவிர்த்து பாஜக இரு இலக்கம் பெறும், வாக்குவங்கி அதிகரிக்கும் என தகவல்கள் அடிப்படையில் சொல்லியிருக்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu