தேசத்தை காப்பாற்ற பிரச்சாரம்; இந்து எழுச்சி முன்னணி முடிவு
தேனியில் நடந்த இந்து எழுச்சி முன்னணி கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு நோட்டீஸ்களுடன் தயாராகினர்.
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராமராஜ் வழிநடத்தினார். உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான ஆதரவானது பெருகி வருவதை சகிக்க முடியாத தமிழக திமுக அரசு அதனை நேர்மையாக சந்திக்க திராணியற்ற நிலையில் அதர்ம செயல்களின் மூலம் தர்மத்தின் வெற்றியை தடுக்க முயல்வதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இருந்தாலும் இம்முறை தமிழக மக்கள் தேசியத்தின் பக்கம் நிற்க முழுமையாக முடிவெடுத்து விட்டனர். இந்த ஓட்டுகள் முழுமையாக பா.ஜ.க.,வுக்கு விழுவதை உறுதி செய்யவும், பிரதமர் மோடி தலைமையில் தேசத்தை காப்பாற்ற தமிழக வாக்காளர்கள் ஜனநாயக கடமை ஆற்றுவதை உறுதி செய்யவும் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை ஒன்றாம் நாள் ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவில் திருவிழாவினை முன்னிட்டு தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி இயக்கத்தின் சார்பாக நடைபெறும் மாபெரும் அன்னதான நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தேனி அல்லிநகரம் ஸ்ரீவீரப்ப அய்யனார் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவிற்கு வருகை புரிவார்கள் அது சமயம் பக்தர்களின் வசதிக்காக குறிப்பாக பெண்களுக்கு தற்காலிக கழிப்பறை வசதிகளை ஆங்காங்கே அமைத்துக் கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும் நகராட்சி நிர்வாகத்தையும் இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu