ஆர்.எம்.வீரப்பனின் சாதனை அது!
1984 டிசம்பர் 6-ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்புக்கு திடீரென அழைத்தார் அமைச்சர் ஆர்,எம்.வீரப்பன். கையில் வைத்திருந்த போட்டோக்களை பத்திரிகையாளர்களிடம் காட்டினார்.
1984-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடைபெற்றது.
அப்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட முதல்வர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் ப்ருக்ளின் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கிறாரா... அவரால் நடமாட முடியுமா... பேசுவாரா? என்றெல்லாம் வதந்திகள் வந்து கொண்டிருந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, அனுதாபத்தை அள்ள வீடியோ எடுக்க முடிவானது.
கொடைக்கானலில் கோடைக்கால வெப்பநிலை எப்படி இருக்கும் தெரியுமா?
ரேடியோவில் இருந்து டிவி, டேப் ரிக்கார்டர் என அறிவியல் மாறியிருந்த கொஞ்சக் காலத்திலேயே வி.சி.ஆர்., வி.சி.பி என்கிற வீடியோ தொழில்நுட்பம் எட்டிப்பார்த்த நேரம் அது. தேர்தலுக்கு 18 நாட்கள் தான் இருந்தன. 1984 டிசம்பர் 6-ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்புக்கு திடீரென அழைத்தார் அமைச்சர் ஆர்,எம்.வீரப்பன். கையில் வைத்திருந்த போட்டோக்களை பத்திரிகையாளர்களிடம் காட்டினார்.அத்தனை போட்டோவிலும் எம்.ஜி.ஆர் போஸ் கொடுத்தார். பத்திரிக்கை படிப்பது, மனைவி ஜானகி மற்றும் மருத்துவமனை ஊழியர்களுடன் சிரித்துப் பேசுவது என மொத்தம் 3 படங்கள் இருந்தன. அந்த படங்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டன. படங்கள் மட்டுமல்ல, அடுத்து வீடியோவையும் வெளியிட்டார்.
இந்த படங்களும், வீடியோக்களும் தமிழகத்தின் தேர்தல் களத்தை புரட்டிப்போட்டு விட்டது. எதிர்பார்த்து போலவே எம்.ஜி.ஆர்., அபாரமாக வெற்றி பெற்றார். இந்த சாமர்த்தியமான செயலுக்கு ஆர் எம் வீரப்பனை மொத்த கட்சியுமே கொண்டாடியது. கிட்டத்தட்ட தோல்வியடைய வாய்ப்பிருந்தும் அந்த தேர்தலில் எம்ஜிஆர் முகத்துக்காக பல வேட்பாளர்கள் அதிக வாக்குகளைப் பெற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu