/* */

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள்: பார்வையாளர் ஆய்வு

மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர், வேளாண் , உழவர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் த.ஆபிரகாம் தலைமையில் நடந்தது

HIGHLIGHTS

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள்: பார்வையாளர் ஆய்வு
X

தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் த.ஆபிரகாம் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில்  நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள்தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அரசு சிறப்புசெயலாளர் த.ஆபிரகாம் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் இன்று (19.11.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் த.ஆபிரகாம் தெரிவித்ததாவது:

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து தலைமை அலுவலர்களுடன் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான சிறப்பு சுருக்க திருத்த முகாமானது திருத்தம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் உள்ள சந்தேகங்கள், சிரமங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கவே இக்கூட்டமானது நடத்தப்படுகிறது. 18-வயது நிறைவடைந்து இது நாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும், 01.01.2023 அன்று 18-வயது நிறைவடைய உள்ளவர்களும் அதாவது 01.01.2005 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம்-6ஐப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படம். வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்திற்கான ஆதாரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் 17வயது முடிவுற்றவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

இறந்த அல்லது இடம் பெயர்ந்த வாக்காளரது பெயரினை நீக்கம் செய்வதற்கு படிவம்-7-லும், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்வதற்கு படிவம்-8லும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மைய அலுவலர் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் 09.11.2022 முதல் 08.12.2022 வரை காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணபிக்கலாம் என தேர்தல் ஆணையத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கடந்த 12.11.2022 ,13.11.2022 ஆகிய தினங்களில் நடைபெற்றது. அதேபோல் எதிர்வரும் 26.11.2022 ரூயஅp; 27.11.2022 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9:30 மணி முதல் 5:30 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். இம்முகாம்களை பயன்படுத்திக் கொண்டு வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப் பணிகளை மேற்கொண்டு முழுமையான நேர்மையான வாக்காளர் பட்டியல் உருவாக அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் த.ஆபிரகாம் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய் ) மரு.என்.ஓ.சுகபுத்ரா, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார்; மற்றும் அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், தேர்தல் வட்டாட்சியர்ராமலிங்கம் மற்றும் அங்கிகரீக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Nov 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்