/* */

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ 16 கோடி ஒதுக்கீடு

Agriculture News Today - தஞ்சாவூர் மாவட்டத்திற்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ 16 கோடி ஒதுக்கீடு

HIGHLIGHTS

தஞ்சாவூர்  மாவட்டத்திற்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ 16 கோடி ஒதுக்கீடு
X

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்(பைல் படம்)

Agriculture News Today - காவேரி டெல்டா மாவட்டங்களுக்கு நடப்பு குறுவை பருவத்தில் குறுவை நெல் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்திடவும், நடப்பு தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரவும், பல்வகை பயிர் சாகுபடியினை ஊக்குவித்திடவும், பரிந்துரைக்கப்பட்ட உயர் விளைச்சல் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு நெல் உற்பத்தி திறனை அதிகப்படுத்திடவும், டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திடவும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்திடவும் தமிழ்நாடு முதலமைச்சரால் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூ.16 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்தின் மூலம் நெல் சாகுபடியை ஊக்குவித்திட, 50 சதவீதம் மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் மற்றும் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் மானியத்தில் மாற்றுப்பயிர் சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்கப்படஉள்ளது.

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒருபயனாளிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி மற்றும் அரை மூட்டை பொட்டாஷ் ஆகிய உரங்கள் நு]று சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் குறுவைபருவத்தில் மாற்றுப் பயிர்களான சிறுதானியங்கள், பயறுவகை மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பாக பொதுப்பிரிவினருக்கு 50 சதவீதம் மானியம், ஆதிதிராவிடபிரிவினருக்கு 70 சதவீதம் மானியம் வழங்கப்படஉள்ளது.

இந்தத்திட்டத்தில் பயன் பெறவிரும்பும் விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை ஆகியன உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது வேளாண் விரிவாக்க மையம் மற்றும் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அணுகி உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தே;திட்டம் தொடர்பாக விவசாயிகள் தொடர்புக் கொள்வதற்குஇ அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் துணைவேளாண் விரிவாக்க மையங்களிலும் குறுவை தொகுப்புத் திட்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் 04362-267679 மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர் – வேளாண் பிரிவு அலுவலக எண் 04362-230121 -ஐ தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Jun 2022 10:36 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!