/* */

நாடாளுமன்ற தேர்தலையோட்டி இரு மாநில காவல்துறையினர் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலையோட்டி, குற்றாலத்தில் இரு மாநில காவல்துறையினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாடாளுமன்ற தேர்தலையோட்டி இரு மாநில காவல்துறையினர் ஆலோசனை
X

குற்றாலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இருமாநில காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி தமிழக-கேரள காவல் துறை உயரதிகாரிகள் தென்காசியில் தீவிர ஆலோசனை நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்தான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ள சூழலில், அதற்கான பல்வேறு ஆயத்த பணிகளில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தென்காசி மாவட்டமானது தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நிலையில், தமிழக- கேரளா எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக, கேரளா போலீசார் ஒன்றிணைந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தென்காசி மற்றும் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று தேர்தலின் போது இரு மாநில எல்லைப் பகுதியில் மேற்கொள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

மேலும், தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும், அதற்கு இரு மாநில போலீசாரும் ஒன்றிணைந்து எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்த பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, இரு மாநிலங்களில் உள்ள தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களான தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.K.சுரேஷ்குமார், கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாபு மேத்யூ தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் புனலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்டுவேர்ட் கீலர், தென்காசி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நாக சங்கர், தென்மலை இன்ஸ்பெக்டர் அஜய்குமார், அச்சன்புதூர் காவல் ஆயவாளர் ஹரிஹரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று உள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தமிழக- கேரளா எல்லைப் பகுதி வழியாக அவ்வப்போது அரங்கேற்றப்பட்டு வரும் கடத்தல் சம்பவங்களை முழுமையாக தடுப்பது குறித்தும் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, இரண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிலையில் தெரிவித்ததாவது:-

தேர்தலுக்கு முன்பும், பின்பும் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து இரண்டு மாநில காவல் துறையினர் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டோம்.

மேலும், இரண்டு மாநிலத்தில் உள்ள முக்கிய குற்றவாளிகளின் பட்டியல்கள் குறித்தான தகவல்கள் இரண்டு மாநில போலீசாருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு அவர்களை கண்காணித்து வாரண்ட் உள்ள குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும், தமிழக, கேரளா எல்லைப் பகுதியில் இரு மாநில போலீசார் ஒன்றிணைந்து சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் நக்சல்கள் இல்லை எனவும், மேலும் சந்தேகப்படும் நபர்களை கண்காணிக்கவும் இரு மாநில போலீசர்களும் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது, இரண்டு மாநில எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புளியரை மற்றும் மேக்கரை பகுதியில் நவீன சிசிடிவி கேமராக்களை பொருத்தி முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதைப் போல் கேரளாவிலும் உள்ள சோதனை சாவடிகளில் கேரள வனத்துறையினரும் கேரள மாவட்ட போலீசாரும் ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 20 Feb 2024 1:07 AM GMT

Related News