/* */

சுரண்டை காமராஜர் கல்லூரியில் கலந்தாய்வுக் கூட்டம்!

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி இரண்டாவது மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம்

HIGHLIGHTS

சுரண்டை காமராஜர் கல்லூரியில் கலந்தாய்வுக் கூட்டம்!
X

பட விளக்கம்: கல்லூரி முகப்பு படம்.

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி இரண்டாவது மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி இரண்டாவது மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம் குறித்து கல்லூரி முதல்வர் இரா. சின்னத்தாய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் 2023- 24ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், கணிதம் ஆகிய அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு நாளை (ஜூன் மாதம் 12-ம் தேதி) திங்கட்கிழமை நடக்கிறது. வணிக நிர்வாகவியல் (பிபிஏ) மற்றும் வணிகவியல் (பி.காம்) பொருளியல், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 13ம் தேதியும் நடக்கிறது.

விண்ணப்பித்த மாணவ மாணவிகள் அனைவரும் மேற்குறிப்பிட்ட நாட்களில் தங்களது 10ம் வகுப்பு சான்றிதழ், +1 மற்றும் +2 மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், விண்ணப்பித்த படிவம் அசல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் புத்தகம் ஆகியவை அசல் மற்றும் 5 நகல்களுடன் காலை சரியாக 9 மணிக்குள் கல்லூரி வளாகத்திற்கு வந்து வருகை பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும்.

மேலும் மாணவ மாணவிகள் தங்கள் தர வரிசை பட்டியல் விவரங்களை www.kgac.ac.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 11 Jun 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு