/* */

தென்காசி அருகே குழந்தைகளுடன் ஒரு நாள் நிகழ்ச்சி: எம்எல்ஏ பங்கேற்பு

தென்காசி மாவட்டம் சுரண்டையில், தென்காசி சட்டமன்ற உறுப்பினருடன் குழந்தைகள் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

குழந்தைகள் தினம். குழந்தைகளுடன் ஒரு நாள் நிகழ்ச்சி நடத்திய எம் எல் ஏ.

1889 - ஆம் ஆண்டு 14-ஆம் தேதி பிறந்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் குழந்தைகள் தினம் சிறப்பாக நடைபெற்றது. தென்காசி மாவட்டம் சுரண்டையில், தென்காசி சட்டமன்ற உறுப்பினருடன் குழந்தைகள் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

விழாவிற்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் S.P.முரளிராஜா, மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் பள்ளி குழந்தைகளின் பேச்சு போட்டி, கட்டுரை ஒப்புவித்தல் மற்றும் இயற்கையை பேணுதல், விவசாயம் காப்போம் போன்ற விழிப்புணர்வு கிராமிய நடன கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் ராஜகோபாலப்பேரி, கழநீர்குளம், பன்பொழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

மேலும் ராஜகோபாலப்பேரி கிராமத்தில் தேவைப்படுகிற அடிப்படை பிரச்சினைகள், பள்ளிகளுக்கு தேவையான கழிவறை, குடிநீர் வசதி வேண்டி சட்டமன்ற உறுப்பினரிடம் பள்ளி குழந்தைகள் கோரிக்கை மனு வழங்கினர். குழந்தைகளிடம் பேசிய தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தன்னை சட்டமன்ற உறுப்பினராக்கிய பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கே சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பதாகவும் பள்ளி குழந்தைகள் கேட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தெரிவித்தார். மேலும் இவ்விழாவில் கட்சி நிர்வாகிகள் பலர் கொண்டனர்.

Updated On: 15 Nov 2021 9:39 AM GMT

Related News