/* */

தென்காசி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

பொதுமக்கள் தண்ணீரின் தேவையையும், அவசியத்தையும் உணர்ந்து, குடிநீரை சிக்கனமாகவும், வீணாக்காமலும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

HIGHLIGHTS

பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை - மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தகவல்

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினமும் சராசரியாக 400 க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் . தற்போது பரவி வரும் வைரஸ் காச்சலால் அதிக அளவில் மாவட்டம் முழுவதும் இருந்து நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு குடிப்பதற்கு தேவையான குடிநீர்க்காக ஏற்கனவே அனைத்து வார்டுகளிலும் சேர்த்து 26 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது .

மேலும் கோடைக்காலம் நெருங்கி வருவதாலும் , கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொதிக்கவைக்கப்பட்ட கிருமி நீக்கம் செய்யப்பட்ட சூடான குடி தண்ணீர் வழங்குவதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இணைஇயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா அவர்களின் ஆலோசனையின் படி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் மற்றும் உரைவிட மருத்துவர் எஸ் எஸ் ராஜேஷ் அவர்கள் முயற்சியில் ஒரு பெரிய 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நல்லி பிரசவ வார்டு பகுதியில் இரண்டு எண்ணமும், பிரசவ வெளியில் நோயாளி பகுதியில் இரண்டு எண்ணமும், சூடான குடிநீர் நல்லி ஒவ்வொரு பகுதியில் ஒன்றும் என, கிருமி நீக்கம் செய்யப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு ,வேகமாக இன்னும் ஒரு சில தினங்களில் முடிவடையும் தருவாயில் உள்ளது.

பொதுமக்களின் தேவைகளை அவ்வப்போது ஆராய்ந்து அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய எப்போதும் மருத்துவமனை நிர்வாகமும்,மாவட்ட நிர்வாகமும் தயாராக உள்ளது என்பதை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர். மருத்துவர் ஜெஸ்லின் தெரிவித்தார் . மேலும் அவர் கூறும்போது பொதுமக்கள் தண்ணீரின் தேவையையும், அவசியத்தையும் உணர்ந்து, குடிநீரை சிக்கனமாகவும், வீணாக்காமலும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

Updated On: 11 Feb 2023 7:46 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  8. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  9. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?