/* */

குற்றாலத்தில் ரூ 11 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

குற்றாலத்தில் 11 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

குற்றாலத்தில் ரூ 11 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
X

குற்றாலம் பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆய்வு செய்தார்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது குற்றாலம். இங்கு பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி, குளிக்க அனுமதி இல்லாத வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேனருவி மற்றும் செண்பக தேவி அருவி என ஏராளமான அருவிகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் பருவநிலை காலங்களாகும். இங்கு விழும் மெல்லிய சாரல் மழைக்கும், வீசும் தென்றல் காற்றுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து அதனை அனுபவித்து செல்கின்றனர்.

இங்குள்ள அருவிகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளை மேம்படுத்தவும், உள் கட்டமைப்பு வசதிகள், பழுது அடைந்த கட்டிடங்களை மேம்படுத்தவும், பயன்படுத்தாத நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து புது கட்டிடங்கள் கட்டவும், மேலும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.

இதைத் தொடர்ந்து அது சார்ந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான பழனி நாடார் குற்றாலம் ஐந்தருவி, அதன் அருகே உள்ள எக்கோ பார்க் ஆகிய பகுதிகளை இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த கட்டுமான பொருட்களின் தரத்தை சோதித்த எம்எல்ஏ தரமற்ற பொருட்களாக உள்ளது என்று கூறி அரசு பொறியாளர் முருகானந்தத்தை ஃபோனில் தொடர்பு கொண்டார். அப்போது தரமற்ற பொருட்களாக இருப்பதாகவும் இதனை தாங்கள் உடனே பார்த்து ஆய்வு செய்து தரமான பொருட்களைக் கொண்டு கட்ட வேண்டும் என்று கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி மன்ற துனை தலைவர் உதயகிருஷ்ணன், வட்டார தலைவர் பெருமாள், மாவட்ட பொதுச்செயலாளர் சந்தோஷ், தென்காசி நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், துணைத் தலைவர் சித்திக், ஆயிரபேரி மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Jun 2023 10:34 AM GMT

Related News