/* */

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

HIGHLIGHTS

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
X

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி: அகிம்சை,சகிப்புத் தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம் எவ்வகையான கொடுஞ்செயல்களயும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடும் எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும் அமைதி, சமுதாய ஒற்றுமை நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளும் ஊறுவிளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்துப் போராடவும் நாம் உறுதி கூறுகிறோம். என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் இதேபோல் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Updated On: 20 May 2022 1:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு