/* */

சிவகங்கை அருகே வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

சிவகங்கை அருகே மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

சிவகங்கை அருகே வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்
X

வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, 1 மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் ஆய்வு மேற்கொண்டார்.

அதில், சூரக்குளம் புதுக்கோட்டை ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2022-2023ன் கீழ் ராம்நகர் முதல் திருப்பதி நகர் வரை ரூ.24.75 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்டல் சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாகவும், சூரக்குளம் - புதுக்கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2022-2023ன் கீழ் ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொது விநியோக கடையின் கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும், காளையார்மங்கலத்தில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் 2022-2023ன் கீழ் ரூ.84.50 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணி, வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தொடர்பாகவும் மற்றும் அப்பள்ளியில் சத்துணவு மையத்தில் மதிய உணவுத்திட்டம் மற்றும் காலை உணவுத்திட்டம் ஆகியவைகளின் செயல்பாடுகள் தொடர்பாகவும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கௌரிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திருவேலங்குடி கிராமத்தில் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.16.59 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பைப்லைன் அமைக்கும் பணிகள் தொடர்பாகவும், திருவேலங்குடி பகுதியில் ரூ.11.76 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பஞ்சமூர்த்தி கண்மாய் தூர்வாரும் பணிகள் மற்றும் புதிய மடை கட்டும் பணிகள் தொடர்பாகவும் மற்றும் சென்னலக்குடி கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டுமானப் பணிகள் என காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.85.22 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேற்கண்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார்.

Updated On: 21 Oct 2023 8:43 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  5. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  6. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  7. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  9. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!