/* */

கலைஞரின் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர் தூவி அஞ்சலி

கலைஞரின் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர் மாலையிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

கலைஞரின் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர் தூவி அஞ்சலி
X

சிவகங்கையில் திமுக நகர செயலாளர் துரை தலைமையில் ஊராட்சி மன்றத் தலைவருமான கே.எஸ்.எம் மணிமுத்து முன்னிலையில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் திமுக சார்பாக நகர செயலாளர் துரை அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளரும் ஊராட்சி மன்றத் தலைவருமான கே.எஸ்.எம் மணிமுத்து முன்னிலையில் தனியார் மஹாலில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர் மாலையிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடும் முகாம் துவக்கி வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் சித்த மருத்துவ துறை மூலமாக பொதுமக்களுக்கு சித்த மருந்துகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. மருத்துவத்தின் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு சித்த மருத்துவ அலுவலர் காந்திராஜன் எடுத்துரைத்தார்.

மேலும் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள யோகா பயிற்சி பற்றி யோகா மருத்துவர் தங்கம் பொதுமக்கள் மத்தியில் யோகா செயல்முறைகளை செய்து காட்டினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Aug 2021 10:44 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?