/* */

எல்ஐசி ஊழியர்கள் இரண்டு நாள் போராட்ட அறிவிப்பு

எல்ஐசி பங்கு விற்பனை செய்வதை கண்டித்து இம்மாதம் 28, 29 ம் தேதிகளில் எல்ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிப்பு

HIGHLIGHTS

எல்ஐசி ஊழியர்கள் இரண்டு நாள் போராட்ட அறிவிப்பு
X

எல்ஐசி ஊழியர்களின் ஆர்ப்பாட்டம்

எல்ஐசி பங்கு விற்பனை செய்வதை கண்டித்து இம்மாதம் 28, 29 ம் தேதிகளில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக எல்ஐசி ஊழியர்கள் சங்க வேலுார் கோட்ட பொதுச் செயலாளர் ராமன் கூறினார்.

இது குறித்துஅவர், ராணிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எல்ஐசி நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பங்குகளை விற்பதற்கான ஆவணங்களை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து 1994ம் ஆண்டு முதல் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் போராடி வருகிறது. மத்திய அரசு வருவாய் தட்டுப்பாட்டால் திணறிக் கொண்டிருக்கிறது. பெரு முதலாளிகள் கார்ப்பரேட் வரியை ஆண்டு தோறும் குறைத்துக் கொண்டே வருவதும், குறைக்கப்பட்ட வரியை கூட அவர்கள் செலுத்தாத நிலையில் வசூலிக்க நடவடிக்கை எடுக்காமல் தள்ளுபடி செய்து வருவதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அவற்றை எல்லாம் சரி செய்வதற்கு பதிலாக பொதுத்துறை நிறுவனங்களை விற்று அரசை நடத்த பார்க்கிறார்கள்.

இப்போது எல்ஐசி வசம் உள்ள அரசின் பங்குகளை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையில் ஒரு ரூபாய் கூட எல்ஐசி க்கு கிடைக்கப் போவதில்லை. அவை அரசின் கஜானாவுக்கு தான் செல்கிறது. செபிக்கு மத்திய அரசு தெரிவித்துள்ள முன்மொழிவில் இது தெளிவாக உள்ளது. இந்த பங்கு விற்பதன் மூலம் எல்ஐசிக்கு எந்த பயனும் இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் எல்ஐசிக்கு வரும் உபரி நிதியில் 95 சதவீதம் பாலிசிதாரர்களுக்கு போனசாக வழங்கப்படுகிறது. இப்போது அது 90 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதால் எல்ஐசி நிறுவனத்துக்கோ, பாலிசிதாரர்களுக்கோ, நாட்டுக்கோ எந்த பயனும் இல்லை.

இதனால் இந்த முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். எல்ஐசி பங்கு விற்பனை செய்வதில் எந்த நியாயமும் இல்லை. பட்ஜெட்டில் விழும் நிதிப் பள்ளத்தை ஈடுகட்ட கார்ப்பரேட் வரிகள், செல்வ வரிகளை உயர்த்தாமல் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்று சரி கட்ட நினைக்கும் அரசின் தவறான பாதை.

பங்குகளை விற்பனை செய்வதால் ஒரு லட்சம் எல்ஐசி ஊழியர்கள், 12 லட்சம் எல்ஐசி முகவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே எல்ஐசி பங்கு விற்பனை, இரண்டு வங்கிகள் தனியார் மயம், ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயம், ரயில்வே சேவைகளில் தனியார் அனுமதி போன்றவற்றை மத்திய அரசு கை விட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 5ம் தேதி வேலுார் கோட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலம் மற்றும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. வரும் மார்ச் மாதம் 28, 29 ம் தேதிகள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வேலுார் கோட்ட தலைவர் பழனிராஜ், தேவராஜ், ரமேஷ்பாபு, குணாளன், சுப்பிரமணி, ஞானசேகரன், பெருமாள், குபேந்திரன், பழனி, தயாநிதி, பரசுராமன், வெங்கடேசன், கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Updated On: 7 March 2022 4:12 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்