/* */

15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தி வைத்த ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த அனுமதி கோரி மனு

15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தி வைத்த ஜல்லிக்கட்டு விழாவை மீண்டும் நடத்த அனுமதி கோரி ராமநாதபுரம் கலெக்டரிடம் மக்கள் மனு

HIGHLIGHTS

15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தி வைத்த ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த அனுமதி கோரி மனு
X

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தி வைத்த பொக்கனாரேந்தல் சாத்துடையார் அய்யனார் கோயில் ஜல்லிக்கட்டு விழாவை மீண்டும் நடத்த அ அனுமதி கோரி கலெக்டரிடம் மனு அளித்த கிராம மக்கள்

15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தி வைத்த ஜல்லிக்கட்டு விழாவை மீண்டும் நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு.

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தி வைத்த பொக்கனாரேந்தல் சாத்துடையார் அய்யனார் கோயில் ஜல்லிக்கட்டு விழாவை மீண்டும் நடத்த அனுமதி கோரி கலெக்டர், எஸ்பியிடம் ராமநாதபுரம் மாவட்ட ஜல்லிக்கட்டு, எருதுகட்டு, வடமாடு உரிமையாளர்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் மனு அளித்தார்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சி பொக்கனாரேந்தல் சாத்துடையார் அய்யனார் கோயில் ஜல்லிக்கட்டு விழா கோயிலுக்கு பாத்தியப்பட்ட அனைத்து கிராமங்கள் சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நீதிமன்ற தடை விதிப்பால் விழா நிறுத்தி வைக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு விழாவிற்கான தடையை நீக்கி கட்டுப்பாடுகளுடன் கூடிய உத்தரவை உச்ச நீதிமன்றம் வழங்கியதன் பேரில் கோயிலுக்கு பாத்தியப்பட்ட பொக்கனாரேந்தல், பள்ளபச்சேரி, தாதனேந்தல், முத்துவீரப்பன்வலசை, கைக்கோளர்மடம், திருப்புல்லாணி, பால்கரை, ஆர்.எஸ்.மடை, வீரன்வலசை, கோவிந்தனேந்தல், அம்மன்கோவில், அச்சடிபிரம்பு, குமுக்கோட்டை, ஆனைகுடி, சிவஞானபுரம், களரி, ராமநாதபுரம் இந்திராநகர், திருப்புல்லாணி இந்திராநகர், கே.கொடிக்குளம் கங்கைகொண்டான், வெண்குளம், வன்னிக்குடி, வித்தானூர், வள்ளிமாடன்வலசை, ஆர்.காவனூர், சுமைதாங்கி, சீதக்காதி நகர், உத்தரவை, சேதுக்கரை, பள்ள மோர்க்குளம் கிராம பொறுப்பாளர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு, எருதுகட்டு, வடமாடு, உரிமையாளர்கள் நலச்சங்க பொறுப்பாளர்கள் சார்பில் பிப்.16ல் ஜல்லிக்கட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு விழாவை தமிழக அரசிதழில் வெளியிட வேண்டும். இந்த சமத்துவ ஜல்லிக்கட்டு விழாவை தமிழக அரசின் வழிகாட்டல் நெறிமுறைகள், உச்ச நீதிமன்ற வழிகாட்டல் படி நடத்துவோம். விழாவிற்கு காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை ஏற்று நடத்தவும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு மாநில தலைவர் ராஜசேகரன் ஜல்லிக்கட்டு எருதுகட்டு, வடமாடு உரிமையாளர்கள் நலச்சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் சுந்தரராஜ் ஆகியோர் வழிநடத்தவும் உள்ளனர். ஜல்லிக்கட்டு விழாவிற்கு அனுமதி வழங்கி விழாவில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Jan 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  6. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!