/* */

ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை விடுவிக்க கோரி குடும்பத்தினர் மனு

இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை விடுவிக்க கோரி அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை விடுவிக்க கோரி குடும்பத்தினர் மனு
X

மனு கொடுக்க வந்திருந்த மீனவ குடும்பத்தினர்.

இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 18ம் தேதி பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தை சேர்ந்த 43 மீனவர்களையும் 6 விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். சிறை பிடித்துச் சென்ற 43 மீனவர்கள் தற்போது இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க கோரி இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மீனவர்களை விடுவித்து தர நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டங்களை கைவிட்டு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்நிலையில் அவர்கள் பிடிபட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் விடுவிக்கப்படாததால் கைது செய்யப்பட்ட 43 மீனவர்களின் உறவினர்கள் கைக் குழந்தைகளோடு இன்று இராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

மீனவப் பெண்கள் அழுது புலம்பி மீன்வளத் துறை அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மீன்வளத்துறை துணை இயக்குனரை நேரில் சந்தித்து பொங்கல் பண்டிகைக்குள் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக மனு அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் மீனவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வாக்குறுதி அளித்தார்.

Updated On: 10 Jan 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்