/* */

தனுஷ்கோடி செல்ல தடை.: சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்

தனுஷ்கோடி செல்ல தடை. விதித்து போலீஸார் தடுத்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்

HIGHLIGHTS

தனுஷ்கோடி செல்ல தடை.:  சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்
X

பைல் படம்

தனுஷ்கோடிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டதால். சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தனுஷ்கோடி செல்ல சுற்றலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தடுப்பு அமைத்து காவல்துறையினர் தனுஸ்கோடி வரும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள கொரோன ஊரடங்கு கட்டுபாடுகளின் அடிப்படையில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் இன்று காலை முதல் மரைன் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனுமதியில்லாமல் தடையை மீறி கடலில் இறங்கும் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அரிசல்முனை செல்லும் சுற்றுலா பயணிகளை புதுரோடு பகுதியில் காவல்துறையினர் தடுப்பு வைத்து தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் சுற்றலா வந்துள்ள சுற்றுலா பயணிகள் சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், உச்சிபுளி அடுத்துள்ள அரியமான் கடற்கரையில் வார இறுதி நாட்களில் என்பதால் உள்ளூர் பொதுமக்கள் அதிக அளவு குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம். எனவே அரியமான் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் வரும் வழியிலேயே தடுப்பு வேலிகள் அமைத்து திருப்பி அனுப்பி வருகின்றன.தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரை பகுதிகளில் மரைன். காவல் ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் மெரைன் போலீசார் கடற்கரை மணலில் செல்லும் ஏடிபி வாகனம் மூலம் சென்று பொது மக்களை கடலில் இறங்காமல் தடுக்கவும் கடற்கரைகளில் கூட்டம் கூடாமல் இருக்கவும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.அதே போல் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மாரியூர், சீனியப்பா தர்ஹா, அரியமான், தேவிபட்டினம், தனுஷ்கோடி, அக்னி தீர்த்த கடற்கரை, என பல்வேறு இடங்களில் இன்று முதல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்காமல் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 7 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்