/* */

பாம்பனில் ஒக்கி புயலில் இறந்த மீனவர்களுக்கு 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி

ஒக்கி புயலில் இறந்த மீனவர்களுக்கு பாம்பன் வடக்கு கடற்கரையில் 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

பாம்பனில் ஒக்கி புயலில் இறந்த மீனவர்களுக்கு  4ம் ஆண்டு நினைவு அஞ்சலி
X

ஒக்கி புயலில் இறந்த மீனவர்களுக்கு பாம்பன் வடக்கு கடற்கரையில் 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த நவம்பர் 30, 2017 அன்று இந்திய பெருங்கடலில் ஒக்கி புயல் தாக்கியது. முன்னெச்சரிக்கை தகவல்கள் முறையாக இந்திய பெருங்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களுக்கு சென்று சேராததால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கிக்கொண்டனர். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பெரும்பாலான மீனவர்கள் புயலிடம் போராடி அருகில் உள்ள துறைமுகங்களில் கரை சேர்ந்தனர்.

அரசின் மெத்தனப்போக்கால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்தனர். இதில் பெரும்பாலான ஆழ்கடல் மீனவர்கள் உயிரிழந்தனர். இதில் பலரும் படகு கடலில் மூழ்கிய சூழ்நிலையிலும் நீந்தி கொண்டு தங்களை காப்பாற்ற கண்டிப்பாக யாராவது வருவார்கள் என்ற நம்பிக்கையில் பல நாட்கள் நீந்திக்கொண்டு நம்பிக்கையோடு காத்திருந்து உயிரை விட்டுள்ளனர்.

இதன் மூலம் மீனவர்களை காப்பாற்ற அரசு நவீன முயற்ச்சிகளை பயன்படுத்த வேண்டும் மற்றும் மீனவர்களுக்கு நவீன தொலைதொடர்பு கருவிகள் கொடுக்கவேண்டும் என்ற நிலை ஏற்ப்பட்டது. ஒக்கி புயலில் இறந்தவர் மீனவர் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் அரசு வழங்கியது. இதை தொடர்ந்து ஒக்கி புயலில் இறந்த மீனவர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட நாட்டுப்படகு சங்க தலைவர் SPR ராயப்பன் தலைமையில் பாம்பன் வடக்கு கடற்கரையில் ஒக்கி புயலில் கொல்லப்பட்டவர்களுக்கு 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி, மதிமுக மாவட்ட மீனவரணி செயலாளர் ராஜ்குமார், மீனவம் காப்போம் இயக்கத்தை சார்ந்த ராமு மற்றும் பாரம்பரிய மீனவ சங்க பிரதிநிதிகள் ரூஸ்வெல்ட், சகாயம், அமல்ராஜ் கடல்சார் மக்கள் நல சங்கமம் மகளிர் அணி தலைவி லோவியாதரஸ் உள்ளிட்ட 50 மேற்ப்பட்ட மீனவர்களும், மீனவ மகளீரும் கலந்துகொண்டு அஞ்சலி மலர் தூவி செலுத்தினர். நிகழ்ச்சியினை மீனவம் காப்போம் அமைப்பு முன்னெடுத்தது.

Updated On: 30 Nov 2021 10:33 AM GMT

Related News