வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமை தொடக்கி வைத்த சட்ட அமைச்சர்

வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமை தொடக்கி வைத்த  சட்ட அமைச்சர்
X

 குருவிக்கொண்டான்பட்டி, ஸ்ரீ சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப்பள்ளியில் ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாமினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.

பொது மக்களை பல்வேறு நோய்களிலிருந்து தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து குணப்படுத்துவதாகும்

புதுக்கோட்டை மாவட்டம், குருவிக்கொண்டான்பட்டி, ஸ்ரீ சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப்பள்ளியில் ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாமினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், குருவிக்கொண்டான்பட்டி, ஸ்ரீ சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) மா.செல்வி தலைமையில் நடைபெற்ற, கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை, சட்டம், நீதி மன்றங்கள், சிறைச் சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (02.03.2023) துவக்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகங்களையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகங்களையும் வழங்கி, கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.

பின்னர் சட்ட அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம் புத்துணர்ச்சியுடன் மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருமயம் வட்டம், குருவிக்கொண்டான்பட்டி, ஸ்ரீ சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப்பள்ளியில், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இம்முகாம்களில் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ குழுவினரால் பொது மக்களுக்கு குழந்தைகள் நலம், பல் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய் சிகிச்சை, நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு, புற்று நோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்த மற்றும் இந்திய மருத்துவம், மனநல ஆலோசனை போன்ற துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களால் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

இம்முகாம்களில் கிராமங்கள் மற்றும் நகர்புற பகுதிகளுக்கு நேரில் சென்று மருத்துவ வல்லுநர் குழுவினர்களால் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்களை பல்வேறு நோய்களிலிருந்து தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து குணப்படுத்துவதாகும்.

எனவேதமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்காக நடத்தப்படும் ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாமினை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொண்டு, ஆரம்ப நிலையிலேயே நோயினை கண்டறிந்து அவற்றிற்கு முறையான சிகிச்சை மேற்கொண்டு, குணப்படுத்திக் கொள்வதற்காக நடத்தப்படும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சட்டம், நீதி மன்றங்கள், சிறைச் சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், திருமயம் ஒன்றியக் குழுத் தலைவர் ராமு, வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்செல்வன், திருமயம் வட்டாட்சியர் பிரவினாமேரி, ஊராட்சிமன்றத் தலைவர் விசாலாட்சி வைத்தியநாதன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாராயணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!