/* */

முதிர்ந்த அகவை தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டு தோறும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

HIGHLIGHTS

முதிர்ந்த அகவை தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்
X

பைல் படம்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முதிர்ந்த அகவை தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆண்டு தோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கத் தகுதிகள், 01.01.2022 ஆம் நாளன்று 58 வயது நிறை வடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப் பணி ஆற்றி வருவதற்கான தகுதி நிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத் தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் தோறும் உதவித் தொகையாக ரூ.3500/-, மருத்துவப் படி ரூ.500/- அவரின் வாழ் நாள் முழுவதும் வழங்கப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31.03.2023க்குள் அளிக்கப்பட வேண்டுமெனவும் நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

தமிழறிஞர்களை கௌரவிக்கும் தமிழக அரசின் விருதுகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக, மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் நாள், அரசின் சார்பில் ஆண்டுதோறும் 'மகாகவி நாளாகக்' கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தியது, தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி விருது” என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.

Updated On: 17 March 2023 12:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...