/* */

பணியின்போது உயிர் நீத்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி

நாடு முழுதும் இன்று வரை பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த வீரர்களுக்கும் வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

பணியின்போது உயிர் நீத்த  தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி
X
பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு  அஞ்சலி செலுத்தி புதுக்கோட்டை தீயணைப்புத்துறையினர்

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் மீட்புப் பணியின்போது உயிர் நீத்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 1944 -இல் மும்பை விக்டோரியா துறைமுகத்தில் நின்றிருந்த கப்பலில் நேரிட்ட தீயை அணைக்கப் போராடிய தீயணைப்புத்துறை வீரர்கள் 66 பேர் எதிர்பாராத விதமாக அந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர். அந்த நாளை நீத்தார் நினைவு நாளாக ஆண்டு தோறும் தீயணைப்புத் துறையினர் கடைப்பிடித்து வருகின்றனர்.

மேலும் நாடு முழுதும் இன்று வரை தீயணைப்பு மீட்பு பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த வீரர்களுக்கும் வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து இதே நாளில் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, புதுக்கோட்டை தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், அங்குள்ள தியாகிகள் நினைவுத் தூணுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் இ.பானுபிரியா தலைமையில், மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் ப.கார்த்திகேயன் மற்றும் நிலைய அலுவலர் புருஷோத்தமன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதே போல மாவட்டம் முழுதும் உள்ள 12 -க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களிலும் தீத்தடுப்புக்குழுவினர் சார்பில் பணியின் போது உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On: 14 April 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  4. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  5. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  8. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  9. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...