/* */

புதுக்கோட்டையில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு தண்ணீர் சாலையில் ஓடும் அவலம்

புதுக்கோட்டையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் சாலையில் ஓடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் காவிரி குடிநீர்  குழாய் உடைப்பு  தண்ணீர்  சாலையில்  ஓடும் அவலம்
X

புதுக்கோட்டையில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஓடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் சில பகுதிகளுக்கு காவிரி குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும் சில ஏரியாக்களில் குடிநீர் அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு குடிநீர் காசு கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளனர்

இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட சார்லஸ் நகரில் நேற்று இரவு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு விடியவிடிய பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி தெருவில் பெருக்கெடுத்து ஓடியது

இதனை கண்ட பொதுமக்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடியாக குடிநீர் குழாய் சரி செய்து தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 24 May 2021 7:15 AM GMT

Related News